செல்லப்பிராணிகளுக்கான மலிவு விலை “Waggies” பிராண்டை அறிமுகப்படுத்திய அம்பானி!
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் செல்லப் பிராணி உணவுக்கான வேகீஸ்(Waggies) என்ற பிராண்ட்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
மலிவு விலையில் செல்லப்பிராணி உணவு
இந்தியாவின் முதல் பணக்காரர் மற்றும் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், செல்லப் பிராணி வளர்ப்பு துறையில் தனது முக்கியமான நகர்வு ஒன்றை எடுத்து வைத்துள்ளது.
அதாவது செல்லப் பிராணிகளுக்கான மலிவு விலை உணவு பிராண்டான வேகீஸ்(Waggies)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் FMCG செய்திக்குறிப்பில் இந்த வேகீஸ்(Waggies) அறிமுகத்தை அறிவித்துள்ளது.
செல்லப்பிராணிகளுக்கான உணவு தயாரிப்பான “வேகீஸ்”, முழுமையான ஆரோக்கியம் மற்றும் அத்தியாவசிய கூறுகளை உள்ளடக்கிய செறிவூட்டப்பட்ட சமையல் குறிப்புகளை பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது.
இதில் மூலிகைகள், DHA மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள், எளிதில் செரிக்கக் கூடிய பொருட்கள் சேர்க்கப்படுவதாகவும், சிறந்த ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியுள்ளது என்ற நம்பிக்கையை வேகீஸ் பிராண்ட் பெற்றுள்ளது.
மலிவு விலை ஊட்டச்சத்து உணவு

மேலும் செல்லப்பிராணிகளுக்கான ஊட்டச்சத்து சந்தையில் மலிவு விலைவில் தரமான ஊட்டச்சத்து வழங்கும் வெற்றிடத்தை வேகீஸ் சிறப்பாக நிரப்பும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு கிலோ வேகீஸ் உணவு ரூ.199-க்கு தொடங்குகிறது.
பிரீமியம் வேகீஸ் ப்ரோ(Waggies Pro) ஒரு கிலோ ரூ.249-இல் தொடங்குகிறது.
நுகர்வோர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் 100 கிராம் சோதனை பொட்டலங்களும் ரூ.20க்கு கிடைக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |