இலவச YouTube Premium சந்தாவை வழங்கும் Reliance Jio
ரிலையன்ஸ் ஜியோ 24 மாதங்களுக்கு இலவச YouTube Premium சந்தாவை அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) தனது JioAirFiber மற்றும் JioFiber postpaid பயனர்களுக்கு, 24 மாதங்களுக்கு இலவச YouTube Premium சந்தாவை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய திட்டம் தொடர்பான தகவலை ஜியோ தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் வெளியிட்டுள்ளது.
யாருக்கு இந்த ஆஃபர் கிடைக்கும்?
இந்த சலுகை JioAirFiber மற்றும் JioFiber postpaid பயனர்களுக்கான 5 தனிப்பட்ட திட்டங்களில் மட்டுமே கிடைக்கும்.
- ரூ.888 திட்டம்
- ரூ.1,199 திட்டம்
- ரூ.1,499 திட்டம்
- ரூ.2,499 திட்டம்
- ரூ.3,499 திட்டம்
இந்த திட்டங்களில் உயர் வேக இணைய சேவைகளும், கூடுதலான பல்வேறு App-களும் அடங்கியுள்ளன.
அடிக்கடி ஸ்ட்ரீமிங் செய்வோருக்கு இந்த திட்டங்கள் மிகவும் சிறந்த பயனுள்ளதாக அமைந்துள்ளன.
ஆஃபரில் உள்ள நிபந்தனைகள்
YouTube Premium சந்தா இலவசமாக வழங்கப்பட்டாலும், இந்த வாய்ப்பை பயனர்கள் தொடர்ந்து பெற, தகுந்த broadband திட்டங்களில் 24 மாதங்களுக்கு திருப்திகரமாக சந்தா செலுத்தி இருக்க வேண்டும்.
Enjoy ad-free YouTube on your big screen with JioAirFiber & JioFiber.
— Reliance Jio (@reliancejio) January 11, 2025
Get 24 months of YouTube Premium today.#JioAirFiber #JioFiber #YouTubePremium #WithLoveFromJio pic.twitter.com/JN864Ki7UP
இந்த ஆஃபரில் கிடைக்கும் YouTube Premium வசதிகள்:
- விளம்பரமின்றிய வீடியோக்கள் (Ad-Free Videos)
- ஆஃப்லைன் பதிவிறக்கம் (Offline Downloads)
- பின்னணி செயல்பாடுகளுடன் வீடியோ பிளே ஆகும் (background play)
- 100 மில்லியனுக்கும் மேற்பட்ட பாடல்கள் அடங்கிய Library கொண்ட YouTube Music Premium
இந்த சலுகையை வழங்குவதன் மூலம், ஜியோ தனது broadband சேவைகளை மேம்படுத்தவும், premium உள்ளடக்கங்களை தனது பயனர்களுக்கு வழங்கவும் செய்கிறது.
இந்த அறிவிப்பு, டிஜிட்டல் சேவைகளில் முன்னணியில் இருக்கும் ஜியோவின் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |