வெறும் 999 ரூபாய்க்கு 4ஜி மொபைல்! JioBharat V2 அறிமுகம்
ரிலையன்ஸ் நிறுவனம் அதன் புதிய 4ஜி மொபைலான JioBharat V2 போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
4ஜி இணைய வசதியுடன் மலிவான ஃபீச்சர் போன்
ஜியோவின் ஃபீச்சர் போன் ஜியோ பாரத் போன் வெளியாகியுள்ளது. ஜியோ 4ஜி இணைய வசதியுடன் மலிவான ஃபீச்சர் போனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த போன் சந்தையில் ரூ.999க்கு கிடைக்கும்.
இந்தியாவில் தற்போது 25 கோடி ஃபீச்சர் போன் பயனர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஜியோவின் இந்த நடவடிக்கை, இணைய வசதி கொண்ட போன்களை எல்லோரும் இயக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இணைய வசதி கொண்ட போன்களில் இதுவே குறைந்த விலை கொண்ட ஒரு மொபைல் என்று ஜியோ கூறுகிறது.
10 லட்சம் போன்கள்
இந்த போன் ஜூலை 7 முதல் இந்தியா முழுவதும் உள்ள கடைகளில் கிடைக்கும். முதற்கட்டமாக 10 லட்சம் போன்கள் வெளியிடப்படும்.
இது தவிர, ஜியோ பாரத் போன்களில் சிறப்பு சலுகைகளையும் ஜியோ வழங்குகிறது. 14ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ரூ.123-க்கு கிடைக்கும். பிற நெட்ஒர்க் சேவை வழங்குநர்களுடன் ஒப்பிடும்போது ஜியோவில் 30% தள்ளுபடியில் விலையில் மாதாந்திர சந்தா கிடைக்கிறது மற்றும் ஏழு மடங்கு அதிக டேட்டா கிடைக்கிறது. மற்ற நெட்ஒர்க்களில் ரூ.179-க்கு இரண்டு ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடேட் அழைப்புகளை வழங்குகிறார்கள்.
ரிலையன்ஸ் நிறுவனம் கார்பன் மொபைல் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஜியோ பாரத் போனை தயாரிக்கின்றது.
டிஜிட்டல் சேவைகள் மூலம் ஒவ்வொரு இந்தியரையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் ஜியோ பாரத் தொடங்கப்பட்டதாக ஜியோ தெரிவித்துள்ளது.
Reliance Jio, Jio Bharat V2 4G, Feature Phone
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |