ரூ.15க்கு அன்லிமிட்டெட் 5G சேவை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிரடி
Reliance jio introduce unlimited 5g plan for rs15: ஜியோ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கான ரூ.15 விலையில் அன்லிமிட்டெட் 5G சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூ.15க்கு அன்லிமிட்டெட் 5G சேவை
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.15க்கு ட்ரூலி அன்லிமிடெட் 5ஜி டேட்டா பேக் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் பயனர்கள் 24 மணி நேர அன்லிமிட்டெட் அதிவேக நெட்வொர்க் டேட்டாவை பெற முடியும். மேலும் இதை உடனடியாக பயனர்கள் ஆக்டிவேட் செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக டேட்டாக்களை கொண்ட விளையாட்டு செயலிகள் அல்லது மென்பொருள் புதுப்பித்தலை டவுன்லோடு செய்யும் போது இந்த புதிய ரீசார்ஜ் திட்டமானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உங்கள் போனில் உள்ள வைபை ஹாட்ஸ்பாட் வசதி மூலமாக இந்த 5ஜி டேட்டாவை பகிர்ந்து கொள்ளவும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரீசார்ஜ் திட்டத்தை பெறுவது எப்படி?
ஜியோ சந்தாதாரர்கள் மைஜியோ செயலி மூலம் இந்த ரீசார்ஜ் திட்டத்தை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் பொது வர்த்தக விற்பனை நிலையங்கள் மூலமாகவும் இந்த ஜியோ பேக்கை பயனர்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜியோ நிறுவனத்தின் என்டர்பிரைஸ் இணையதளத்திலும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.