ஒரே நேரத்தில் 9 விருதுகளுடன் Reliance Jio முதலிடம்., உலகின் முதல் நெட்வொர்க்..!
முன்னணி நெட்வொர்க் சோதனை நிறுவனமான ஊக்லாவின் அளவீடுகளில் ரிலையன்ஸ் ஜியோ சிறந்த தொலைத்தொடர்பு ஆபரேட்டராக உருவெடுத்துள்ளது.
Q1 2023 மற்றும் Q2 2023-க்கு இடையில், 5G பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகம் போட்டியாளரான Bharti Airtel-ஐ விஞ்சியது. இதனால் ஜியோ நம்பர் 1 நெட்வொர்க் ஆனது. இந்திய டெலிகாம் சந்தையில் மொபைல் நெட்வொர்க்குகளுக்காக மொத்தம் 9 விருதுகளை வென்றுள்ளது, இதில் 5G நெட்வொர்க்குகளுக்கான அனைத்து விருதுகளும் அடங்கும்.
உலகில் வேறு எந்த தொலைத்தொடர்பு சேவை வழங்குனரும் செய்யாத வகையில் முதன்முறையாக ஜியோ இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதாக ஊக்லா செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த 9 விருதுகளில் சிறந்த மொபைல் நெட்வொர்க், வேகமான மொபைல் நெட்வொர்க், சிறந்த மொபைல் கவரேஜ், சிறந்த மொபைல் நெட்வொர்க், சிறந்த மொபைல் வீடியோ அனுபவம், சிறந்த மொபைல் கேமிங் அனுபவம், வேகமான 5G மொபைல் நெட்வொர்க், சிறந்த 5G மொபைல் வீடியோ அனுபவம், சிறந்த 5G மொபைல் கேமிங் அனுபவம் ஆகியவை அடங்கும்.
ஏர்டெல்லை விட ஜியோவின் டாப் ஸ்கோர்
5G மொபைல் நெட்வொர்க் மெட்ரிக்கில்.. Q1 2023 முதல் Q2 2023 வரை, 5G பதிவிறக்க வேகம் மற்றும் பதிவேற்ற வேகத்தில் Jio 335.75 மதிப்பெண்களைப் பெற்றது, அதே நேரத்தில் பாரதி ஏர்டெல் 179.49 மதிப்பெண்களைப் பெற்றது. Jio 5G பயனர்கள் சராசரியாக 416.55Mbps (ஏர்டெல்லின் 213.3Mbps) பதிவிறக்க வேகத்தையும், சராசரியாக 21.20Mbps பதிவேற்ற வேகத்தையும் (ஏர்டெல்லின் 19.83 Mbps) பெற்றது.
Jio (Jio 5G) பயனர்கள் மும்பையில் முறையே 432.97Mbps மற்றும் 19.12Mbps வேகத்தில் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகத்தை பெற்றுள்ளனர். ஏர்டெல் 5G பயனர்கள் மும்பையில் 269.63Mbps பதிவிறக்க வேகத்தையும், பெங்களூரில் அதிகபட்ச பதிவேற்ற வேகமான 30.83Mbps-யும் பெற்றுள்ளனர். ஜியோ இப்போது அதன் True 5G நெட்வொர்க்குடன் நாடு முழுவதும் கிடைக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |