ஒரே நாளில் ரூ 73,470 கோடியை இழந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் ஒரே நாளில் கடும் சரிவை எதிர்கொள்ள, மொத்தமாக ரூ 73,470 கோடி அளவுக்கு சந்தை மதிப்பை இழந்துள்ளது அந்த நிறுவனம்.
ரிலையன்ஸ் சந்தை மதிப்பு
ஆசிய கண்டத்திலேயே பெரும் கோடீஸ்வரர் என அறியப்படுபவர் ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி. ஜூலை 22ம் திகதி வெளியான தரவுகளின் அடிப்படையில், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ 976,320 கோடி என்றே தெரிய வந்துள்ளது.
எரிபொருள், சில்லறை வர்த்தகம், தொலைத்தொடர்பு உட்பட அவர் கால் பதிக்காத தொழிலே இல்லை. இந்த நிலையில், திங்களன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது சுமார் 73,470 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது.
தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 20,30,488 கோடி என கூறப்படுகிறது. ஜூன் மாதம் வரையான காலாண்டின் நிகர லாபத்தில் 5 சதவீதம் சரிவு ஏற்பட்டதாக வெளியான தகவலையடுத்து ரிலையன்ஸ் பங்குகள் 3 சதவீதத்திற்கு மேல் சரிந்தது.
அதாவது 3.49 சதவிகிதம் சரிவை சந்தித்து ரூ 3001.10 என ரிலையன்ஸ் பங்குகள் வர்த்தகமானது. ஆனால் தேசிய பங்குச்சந்தையில் 3.56 சதவிகிதம் சரிவடைந்து ரூ 2,998.80 என வர்த்தகமானது. இதனாலையே, ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது சுமார் 73,470 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |