மெட்டாவுடன் இணைந்து புதிய AI நிறுவனம் துவங்கிய ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மெட்டாவுடன்இணைந்து புதிய AI நிறுவனம் துவங்கியுள்ளது.
ரிலையன்ஸ்ஸின் புதிய AI நிறுவனம்
AI பயன்பாடு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெரு நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தில் அதிக முதலீடுகளை செய்து வருகின்றன.
கிரிக்கெட் அணி, ஊடகம், எரிசக்தி, பெட்ரோ கெமிக்கல்ஸ், சில்லறை வணிகம் மற்றும் தொலைத்தொடர்பு என பல்வேறு தொழில்களை வைத்துள்ள ரிலையன்ஸ் குழுமம், தற்போது AI துறையிலும் கால்பதிக்கிறது.

மெட்டா நிறுவனத்துடன் இணைந்து, ரிலையன்ஸ் எண்டர்பிரைஸ் இன்டலிஜென்ஸ் லிமிடெட் (REIL) என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளது.
இந்த நிறுவனம் ரிலையன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் மற்றும் மெட்டாவின் துணை நிறுவனமான Facebook Overseas உடனான கூட்டு முயற்சி ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்டா 30% பங்கு
ரூ.855 கோடி முதலீட்டில் துவங்கப்படும் இந்த நிறுவனத்தில் 70% பங்குகளை ரிலையன்ஸும், 30% பங்குகளை மெட்டாவும் வைத்திருக்கும் என தெரியவந்துள்ளது.

இந்த நிறுவனம், ஜெனரேட்டிவ் AI மாதிரிகளைத் தனிப்பயனாக்கிப் பயன்படுத்த நிறுவனங்களுக்கு உதவுவதை ஒரு சேவையாக வழங்கும்.
மேலும், விற்பனை, சந்தைப்படுத்தல், IT செயல்பாடுகள், வாடிக்கையாளர் சேவை மற்றும் நிதி உள்ளிட்ட தொழில்களுக்கான முன்-கட்டமைக்கப்பட்ட தீர்வுகளின் தொகுப்புகளை வழங்கும்.
இதில், லாமா அடிப்படையிலான மாதிரிகளை உருவாக்குவதில் மெட்டா அதன் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கும்.
அதேவேளையில், ரிலையன்ஸ் அதன் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கான அணுகலை வழங்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |