முகேஷ் அம்பானி தனது வருவாயை எங்கே முதலீடு செய்கிறார்... முழு பின்னணி
ஆசியாவிலேயே பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, தமது வருவாய் தொகையை எங்கே முதலீடு செய்கிறார் என்ற பின்னணி வெளியாகியுள்ளது.
எங்கே முதலீடு செய்கிறார்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, இந்தியா மட்டுமின்றி, ஆசியாவிலேயே பெரும் கோடீஸ்வரர் என அறியப்படுபவர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்பது ரூ 19,86, 000 கோடி.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது தொலைத்தொடர்பு, எரிவாயு மற்றும் எண்ணெய், சில்லறை விற்பனையில் கோலோச்சி வருகிறது. ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 116.1 பில்லியன் அமெரிக்க டொலராகும்.
அதாவது இந்திய பண மதிப்பில் ரூ 9,69,600 கோடி. ஆனால் முகேஷ் அம்பானி தமது வருவாயை எங்கே முதலீடு செய்கிறார் என்பது தெரியுமா? முகேஷ் அம்பானி தனது பணத்தை பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.
சாதிக்க வாய்ப்பிருக்கும்
எதிர்காலத்தில் சாதிக்க வாய்ப்பிருக்கும் பல தொழில்களில் அவர் முதலீடு செய்துள்ளார் என்றே கூறப்படுகிறது. சமீபத்தில் தான் மருந்து விநியோக நிறுவனமான Netmeds நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை வாங்கியிருந்தார்.
மட்டுமின்றி, ரூ 983 கோடி மதிப்பில் Addverb Technologies என்ற நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை கைப்பற்றியுள்ளார். மேலும், Paramount Global என்ற பன்னாட்டு நிறுவனத்தின் 13 சதவிகித பங்குகளை ரூ 4310 கோடி மதிப்பில் வாங்கவும் திட்டமிட்டுள்ளார்.
Urban Ladder என்ற சில்லறை வர்த்தக நிறுவனத்தின் 96 சதவிகித பங்குகளை ரூ 182 கோடி மதிப்பில் கடந்த 2020ல் வாங்கியிருந்தார். இவ்வாறாக தமது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தொடர்பில்லாத பல நிறுவனங்களில் முகேஷ் அம்பானி முதலீடு செய்து வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |