ரிலையன்ஸ் AI சூப்பர் கம்ப்யூட்டர்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம்
சூப்பர் கம்ப்யூட்டர் யுகத்தில் இந்தியா நுழைகிறது. அதிக செயல்திறன் கொண்ட கம்ப்யூட்டிங் சிஸ்டம் என்ற பெயரில் அதிநவீன சூப்பர் கம்ப்யூட்டர்களை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சூப்பர் கம்ப்யூட்டர்களை கொண்டு வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries), அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான என்விடியாவுடன் (Nvidia) முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த என்விடியா நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹாங் (Jensen Huang), 2004-ல் இந்தியாவில் என்விடியா கம்ப்யூட்டிங் மற்றும் டெக்னாலஜி சூப்பர் சென்டர்களை நிறுவினார்.
என்விடியா ஹைதராபாத், பெங்களூர், குருகிராம் மற்றும் புனே ஆகிய இடங்களில் மேம்பாட்டு மையங்களைக் கொண்டுள்ளது. தேசிய மொழிகளில் வேலை செய்ய AI பயன்பாடுகளுக்கு பொருத்தமான கணினிகளை உருவாக்கவுள்ளது.
விவசாயிகள் உள்ளூர் மொழிகளில் வானிலை தகவல் மற்றும் பயிர் விலைகளை அறிய உதவும் கணினிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள 45 கோடி ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு AI பயன்பாடுகள் மற்றும் சேவைகளை Nvidia வழங்கவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Reliance, Nvidia, Reliance AI supercomputers, Reliance Jio, Reliance Jio AI, Reliance Artificial Intelligence, Reliance Industries