10 மடங்கு குறைந்த விலையில் பரிசோதனை - மரபணு துறையில் கால்பதிக்கும் ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் குழுமம் மரபணு நோயறிதல் துறையில் நுழைய உள்ளது.
மரபணு நோயறிதலில் ரிலையன்ஸ்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், கிரிக்கெட் அணி, ஊடகம், எரிசக்தி, பெட்ரோ கெமிக்கல்ஸ், சில்லறை வணிகம் மற்றும் தொலைத்தொடர்பு என பல்வேறு தொழில்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

தற்போது மரபணு துறையிலும் ரிலையன்ஸ் குழுமம் கால் பதிக்க உள்ளது.
2021 ஆம் ஆண்டில், பெங்களூருவை தளமாக கொண்ட ஸ்ட்ராண்ட் லைஃப் சயின்சஸைப் என்ற நிறுவனத்தை ரூ.393 கோடிக்கு ரிலையன்ஸ் குழுமம் கையகப்படுத்தியுள்ளது.

சிறப்பு சுகாதார நோயறிதல் மற்றும் மரபணு அறிவியலின் வளர்ந்து வரும் பகுதிகளில் நுழைய, ரிலையன்ஸ் குழுமம் இந்த நிறுவனத்தை பயன்படுத்த உள்ளது.
மரபணு சோதனைகள் இரத்தம் அல்லது உமிழ்நீர் மாதிரிகள் அல்லது உடலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட திசுக்களை அடிப்படையாகக் கொண்டவை.
மரபணு சோதனைகள், நோய்களின் அபாயங்களைப் புரிந்துகொள்ள உதவுகின்றன, புற்றுநோய்கள் எவ்வாறு முன்னேறுகின்றன என்பதை கண்டறிய உதவுகிறது.
தற்போது, மரபணு சோதனைகள் குறைந்தபட்சமாக ரூ.10,000 ஆகும் நிலையில், அதை விட10 மடங்கு குறைந்த விலையில் ரூ.1000 க்கு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |