திடீர் உச்சம் தொட்ட ரிலையன்ஸ் பங்குகள்... ஒரே நாளில் ரூ 70,000 கோடி குவித்த முகேஷ் அம்பானி
புதன்கிழமை ஒரே நாளில், ரிலையன்ஸ் பங்குகள் மீது மக்களின் கவனம் திரும்ப, ஒரே நாளில் ரூ 70,000 கோடிகளை குவித்துள்ளார் முகேஷ் அம்பானி.
சுமார் 3.60 சதவிகிதம் உயர்வு
உலக பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தற்போது 10வது இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, புதன்கிழமை மட்டும் ஒரே நாளில் ரூ 70,000 கோடிகளை குவித்துள்ளதுடன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 20,21,000 கோடியை எட்டியுள்ளது.
முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு என்பது தற்போது ரூ 974530 கோடி என்றே தெரிய வந்துள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் புதன்கிழமை மட்டும் சுமார் 3.60 சதவிகிதம் உயர்வைக் கண்டுள்ளது.
இதனால் ஒரு பங்கின் விலை என்பது ரூ 2,987.85 என விற்பனையாகியுள்ளது. அந்த வகையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பும் வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது.
இது இரண்டாவது முறை
ஒரே நாளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ 70,039.26 கோடி அதிகரித்துள்ளது. இதனால் தற்போதைய தரவுகளில் அடிப்படையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ 20,21,000 கோடி என பதிவாகியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 20 லட்சம் கோடியை எட்டுவது இது இரண்டாவது முறை என்றே கூறப்படுகிறது. புதன்கிழமை மட்டும் மும்பை பங்குச்சந்தையில் 4.71 லட்சம் பங்குகள் விற்பனையாகியுள்ளது. தேசிய பங்குச்சந்தையில் 81.63 லட்சம் பங்குகள் விற்பனையாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |