ஆபரேஷன் சிந்தூர் பெயரை சொந்தமாக்க கடும் போட்டி - ரிலையன்ஸ் விலகியது ஏன்?
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
ஆபரேஷன் சிந்தூர்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலையடுத்து, இரு நாடுகளுக்கிடையே பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சிந்தூர் என்பது ஹிந்தியில் சிவப்பு நிற பொட்டை குறிக்கும். ஹிந்து மதப்படி கணவரை இழந்த பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்து கொள்ள மாட்டார்கள்.
பஹல்காம் தாக்குதலில் 26 ஆண்கள் கொல்லப்பட்டு, அவரது மனைவிகள் பொட்டை இழந்ததால் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயருக்கான ட்ரேட் மார்க் உரிமையை பெற முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளன.
நிறுவனங்கள் மட்டுமல்லாது, சுமார் 15 திரைப்பட இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த பெயருக்கு ட்ரேட் மார்க் உரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர்.
வரும் காலத்தில், ஆபரேஷன் சிந்தூர் சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைப்படங்கள் தயாரிக்கப்படலாம்.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் பெயருக்கு, ட்ரேட் மார்க் கோரி விண்ணப்பித்த விண்ணப்பத்தை திரும்ப பெறுவதாக ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் பின் வாங்கியது ஏன்?
இது தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய துணிச்சலின் அடையாளமாக, தேசிய உணர்வின் ஒரு பகுதியாக இப்போது இருக்கும் ஆபரேஷன் சிந்தூரை வர்த்தக முத்திரையாக மாற்றும் நோக்கம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு இல்லை.
Media Statement
— Reliance Industries Limited (@RIL_Updates) May 8, 2025
Reliance Industries has no intention of trademarking Operation Sindoor, a phrase which is now a part of the national consciousness as an evocative symbol of Indian bravery.
Jio Studios, a unit of Reliance Industries, has withdrawn its trademark application,…
ஜியோ ஸ்டுடியோஸை சேர்ந்த ஒரு இளைய நபரால், அங்கீகாரம் இல்லாமல் தற்செயலாக தாக்கல் செய்யப்பட்ட வர்த்தக முத்திரை விண்ணப்பம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவுடன் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதன் அனைத்து பங்குதாரர்களும் நம்பமுடியாத அளவிற்கு பெருமைப்படுகிறார்கள்.
பயங்கரவாதத்தின் தீமைக்கு எதிரான இந்தியாவின் சமரசமற்ற போராட்டத்தில் நமது துணிச்சலான ஆயுதப் படைகளின் பெருமைமிக்க சாதனை ஆபரேஷன் சிந்தூர் ஆகும்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் ரிலையன்ஸ் நமது அரசுக்கும் ஆயுதப் படைகளுக்கும் முழு ஆதரவளிக்கிறது. 'இந்தியா முதலில்' என்ற குறிக்கோளுக்கான நமது அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது" என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |