ஜேர்மனியில் பணிக்காக நகரம் விட்டு நகரம் மாறிய இந்திய இளம்பெண்ணுக்கு கிடைத்த ஏமாற்றம்
இந்திய இளம்பெண்ணொருவர் ஜேர்மன் தலைநகரான பெர்லினில் பணி செய்துவந்த நிலையில், மியூனிக் நகரில் அவருக்கு ஒரு பணி கிடைத்துள்ளது.
ஆகவே, பெர்லின் நகரிலிருந்து மியூனிக் நகருக்கு குடிபெயர்ந்துள்ளார் அவர்.
கிடைத்த ஏமாற்றம்
காஜல் (Kaajal Tekwani), புதிய பணி ஒன்றில் இன்டர்ன் ஆக இணைவதற்காக பெர்லின் நகரிலிருந்து மியூனிக் நகருக்கு குடிபெயர்ந்துள்ளார்.
ஏழு சுற்றுகள் நேர்காணல் முடித்து, கொடுக்கப்பட்ட டாஸ்கையும் வெற்றிகரமாக முடித்த காஜல், ஊதியம் எல்லாம் பேசிமுடித்து பணியில் இணைந்துள்ளார்.
அலுவலகத்துக்குச் சென்று இரண்டே நட்கள் பணி செய்த நிலையில், அவர் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாம். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வந்து காஜலிடம், உங்கள் attitude, சரியில்லை, உங்களிடம் fire இல்லை என்றெல்லாம் கூறினாராம்.
அத்துடன் கொஞ்சம் சீனியரான ஆள் இந்த பணிக்கு வேண்டும் என்றும் காஜலிடம் கூறியிருக்கிறார்கள். விடயம் என்னவென்றால், கண் வலி காரணமாக சற்று தாமதமாக பணிக்குச் சென்றிருக்கிறார் காஜல். அதுவும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
அன்று மாலையே பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் காஜல்!
ஏழு சுற்று நேர்காணல் முடித்து, கொடுத்த டாஸ்கையும் வெற்றிகரமாக முடித்தபிறகுதான் பணியில் இணைந்தேன். அப்போது சீனியர் வேண்டும் என்பது எல்லாம் தெரியவில்லையா என்கிறார் காஜல்.
ஆக, ஒரு இடத்தில் பணி கிடைக்கிறது என்பதற்காக அவசரப்பட்டு ஊரை காலி செய்யாதீர்கள் என்கிறார் காஜல்.
சமூக ஊடகம் ஒன்றில் இது குறித்து இடுகை ஒன்றில் தெரிவித்த காஜல், இரண்டாவது இடுகையில், தனது பயணம் மற்றும் தங்குமிடத்துக்கான செலவை அந்த நிறுவனம் கொடுத்துவிட்டதாகவும், ஆனாலும், அந்த அனுபவம் மனோரீதியாக தன்னை பாதித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
காஜலின் வீடியோவைக் கண்ட பலரும் அவருக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்துவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |