அதிகமாக முடி கொட்டுகின்றதா? இதனை தடுக்க என்ன செய்யலாம்?
Hair loss
Hair problem
By Kishanthini
பொதுவாக முடி நம் உடலின் ஒரு முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. இது உடல் ஆரோக்கியம் மற்றும் நமது முக அழகையும் குறிக்கும் முதன்மையான விஷயமாகும்.
ஆனால் பெரியவர்களை பொறுத்த வரையில் தலையில் உள்ள 10 லட்சம் - 15 லட்சம் முடிகளில் ஒரு நாளைக்கு 80 - 100 முடிகள் வரை இழக்கிறார்கள்.
இந்த அளவு இயல்பானது தான். இதற்கு மேல் அதிகமான பிரச்சினையை ஏற்படுத்தும். அந்தவகையில் தற்போது முடி கொட்டும் பிரச்சினையை எப்படி எளியமுறையில் சரி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
- வெந்தயத்தை அரைத்துத் தலையில் தடவிக் குளித்தால், தலை முடி பளபளப்பாகவும், கறுப்பாகவும், மென்மையாகவும் வளரும்.
- ஒரு பிடி வேப்பிலையை எடுத்து நீரில் வேக வைத்து ஒருநாள் கழித்து மறுநாளும் வேக வைத்து, அந்த நீரைக் கொண்டு தலைமுடியை அலசி வந்தால், முடிகொட்டுவது நின்று விடும். பேன் இருந்தாலும் ஒழிந்து போகும்.
- தலைமுடி நன்கு வளர செவ்வந்திப்பூவை எண்ணெய்யில் கலந்து தடவி வரவேண்டும். கூந்தல் நரை மறைய வேண்டுமானால், தினமும் வெண் தாமரைப்பூ கஷாயம் செய்து, அரை டம்ளர் வீதம் 40 நாள்கள் பருகி வந்தால் நல்ல பலன் கிட்டும்.
- தேவையான அளவு மருதாணி இலைகளைப் பறித்து வந்து சுத்தம் செய்து, நன்கு அரைத்து தலையில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து குளித்தால், தலைமுடி மிருதுவாக இருக்கும். உடல் சூடும் குறையும்.
- நெல்லி இலையையும், இலந்தை இலையையும் மை போல் அரைத்து தலையில் தடவி பத்து நிமிடம் காயவிட்டு குளித்தால், தலைமுடி நரைப்பது நிற்கும்.
- கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேவையான தேங்காய் எண்ணெய் யில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்து வந்தாலும் கூந்தல் செழித்து வளரும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US