உட்கார்ந்தே வேலை செய்பவர்களின் உடல் வலிக்கு தீர்வு இதுதான்- மருத்துவர் கூறும் விளக்கம்

Yashini
in மருத்துவம்Report this article
வளர்ந்து வரும் களங்களில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்து கணினியில் வேலை பார்ப்பது அதிகரித்துவிட்டது.
Corporate, IT வேலைகளில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது அவசியமாகும், இருக்கையில் ஒழுங்கான முறையில் அமர்ந்திருக்காவிட்டால் உடலுக்கு பல பின்விளைவுகள் ஏற்படும்.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் ஏற்படும் உடல் வலிக்கான தீர்வு குறித்து மருத்துவர் சிவராமன் பகிர்ந்துள்ளார்.
மருத்துவர் கூறும் விளக்கம்
ஒரு மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் அசையாமல் அமர்ந்திருப்பது, முதுகில் பாதிப்பை உண்டாக்கும். இதனால் முதுகில் தேய்மானத்தை அதிகரிக்கும்.
எனவே ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து உடற்பயிற்சி செய்தும் காய் கால்களை அசைத்து பின் வேலை செய்யலாம்.
தினசரி காலையில் எளிமையான யோகா பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் சூரிய நமஸ்காரம் போன்றவற்றை செய்யலாம்.
உணவில் புளிப்பு அதிகம் சேர்த்துக்கொள்ள கூடாது.
மேலும், குளிர்ச்சியான உணவுகள் மற்றும் மண்ணுக்குள் விளையும் கிழங்கு வகைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள கூடாது.
பிடி கருணை கிழங்கை மட்டும் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |