காதில் உள்ள அழுக்கை எப்படி எளியமுறையில் போக்கலாம்?
பொதுவாக நமது காதில் அழுக்கு போன்று உண்டாகும் அந்த மெழுகு போன்ற பொருள் கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொலஸ்ட்ராலால் உருவாகிறது. இதனை பலர் சுத்தப்படுத்த அடிக்கடி காட்டன் பட்ஸ்களை போடுவது வழக்கம்.
ஆனால் காட்டன் பட்ஸ் பயன்படுத்தி அழுக்கை சுத்தம் செய்வதால் சில நேரங்களில் இந்த காட்டன் காதுகளில் ஒட்டிக் கொள்ள நேரிடுகிறது. அதனால் காலப்போக்கில் காது கேளாமை பாதிப்பு உண்டாவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.
எனவே இவற்றை எளிய முறையில் நீக்க ஒரு சில வழிகள் உள்ளன.தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
உப்பு நீர்
[N0LFCM ]
அரை கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து உப்பு கரையும் வரை நன்றாகக் கலக்கவும். . இந்த நீரில் காட்டன் பஞ்சை ஊற விடவும். . அழுக்கு உள்ள காது வானைப் பார்க்கும்படி தலையை சாய்த்துக் கொள்ளவும். . பஞ்சைப் பிழிந்து சில துளி நீரை காதுக்குள் விடவும்.
அதே நிலையில் 3-5 நிமிடங்கள் அப்படி இருக்கவும். . பிறகு, தலையை எதிர்புறம் சாய்த்து, காதில் செலுத்திய நீர் வழியும்படி பார்த்துக் கொள்ளவும். . காதுகளின் வெளிப்புறத்தை சுத்தமான டவல் அலல்து ஒரு துணி மூலம் துடைத்து அழுக்கை வெளியேற்றவும்.
ரப்பிங் அல்கஹால்
வெள்ளை வினிகர் மற்றும் ரப்பிங் அல்கஹால் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்துக் கொள்ளவும். . இந்த கலவையில் கட்டன் பஞ்சை ஊற விடவும். . பாதிக்கப்பட்ட காதை வானைப் பார்த்தபடி வைத்துக் கொள்ளவும். . பஞ்சைப் பிழிந்து சில துளி வினிகர் அல்கஹால் கலவையை காதுக்குள் விடவும்.
அடுத்த 5 நிமிடம் அதே நிலையில் அமர்ந்து கொள்ளவும். . பிறகு, எதிர் திசையில் திரும்பி காதில் இருந்து அழுக்கை வெளியேற்றவும். . காதின் வெளிப்புறப் பகுதியை டவல் அல்லது வெள்ளைத் துணியால் துடைத்துக் கொள்ளவும்
பூண்டு
ஒரு கண்ணாடி பாத்திரத்தில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் வெதுவெதுப்பான (உடல் வெப்ப நிலைக்கு சற்று அதிகமான வெப்பத்தில்) ஆலிவ் எண்ணெய்யை எடுத்துக் கொள்ளவும். . ஒவ்வொரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அளவுக்கு ஒரு பல் பூண்டு என்ற விகிதத்தில் எடுத்துக் நசுக்கிக் கொள்ளவும்.
பூண்டை எண்ணெய்யில் கலந்து ஒரு அரை மணி நேரம் ஊற விடவும். . பிறகு பூண்டை எண்ணெய்யில் இருந்து வடிகட்டி எண்ணெய்யை மட்டும் எடுத்துக் கொள்ளவும். . பூண்டு எண்ணெய்யை இன்னும் ஒரு முறை லேசாக சூடாக்கவும். (உடல் வெப்ப நிலைக்கு சற்று அதிகமாக சூடாக்கவும்) . பாதிக்கப்பட்ட காதை வானை நோக்கி பார்க்கும்படி வைத்துக் கொள்ளவும்.
டிராப்பர் பயன்படுத்தி 2-3 துளிகள் பூண்டு எண்ணெய்யை காதில் விடவும்.
.அதே நிலையில் அடுத்த 5 நிமிடம் இருக்கவும்.
. பிறகு எதிர் திசையில் திரும்பி, அதிகமாக இருக்கும் எண்ணெய்யை வெளியேற்றவும். பிறகு ஒரு டவல் அல்லது ரப்பர் பல்ப் சிரிஞ் பயன்படுத்தி அழுக்கை வெளியேற்றவும்.