பாரீஸ் ஈபிள் கோபுரத்திலிருந்த ஒலிம்பிக் வளையங்கள் அகற்றம்: ஆனால்
பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஈபிள் கோபுரத்தில் ஒலிம்பிக் வளையங்கள் பொருத்தப்பட்டன.
ஒலிம்பிக் வளையங்கள் அகற்றம்
பாரீஸ் நகர மேயரான Anne Hidalgo, அடுத்த ஒலிம்பிக் லாஸ் ஏஞ்சல்ஸில் துவங்கும் வரை, அதாவது, 2028ஆம் ஆண்டுவரை, அந்த வளையங்களை ஈபிள் கோபுரத்திலேயே பொருத்தியிருக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
ஆனால், ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவரான Gustave Eiffelஇன் குடும்பத்தினர், ஒலிம்பிக் வளையங்களை 2028ஆம் ஆண்டுவரை ஈபிள் கோபுரத்தில் பொருத்தி வைத்திருக்க எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இந்நிலையில், அந்த வளையங்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. அவை 30 டன் எடை கொண்ட வளையங்களாகும்.
அவை அகற்றப்பட்டாலும், அவற்றைவிட எடை குறைந்த ஒலிம்பிக் வளையங்களை மீண்டும் ஈபிள் கோபுரத்திலேயே பொருத்த பாரீஸ் நகர மேயரான Anne Hidalgo திட்டமிட்டுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளின் வெற்றியை கௌரவிக்கும் வகையில் அந்த வளையங்கள் பொருத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அவரது திட்டத்துக்கு கலாச்சாரத்துறை அமைச்சரான Rachida Datiயிடமிருந்தே எதிர்ப்பு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |