முகத்தில் உள்ள முடிகளை நிரந்தரமாக நீக்க வேண்டுமா? இதோ சூப்பரான எளிய வழிகள்
பொதுவாக பெண்களின் முகம் ரோமங்களின்றி மிருதுவானதாக இருக்கும். ஆனால் சில பெண்களுக்கு முகத்தில் ரோமங்களின் வளர்ச்சி அதிகம் இருக்கும்.
இதற்கு ஹார்மோன்களே முக்கிய காரணம். இதனால் சில பெண்களுக்கு மீசையும், தாடியும் தெரிவதோடு, சிலருக்கு நெற்றியில் கூட ரோமம் அதிகளவில் இருக்கும்.
எனவே இவற்றை எளியமுறையில் போக்க அழகு நிலையங்களுக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் பொருட்கள் கொண்டே சரி செய்ய முடியும்.
தற்போது இதனை எப்படி எளியமுறையில் நிரந்தரமாக நீக்கலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
- ஓட்ஸை தண்ணீரில் போட்டு உப்ப வைத்து, வாழைப்பழத்தை சேர்த்து பேஸ்ட் தயார் செய்யவும். இந்த கலவையை நீங்கள் முடியை அகற்ற விரும்பும் முகத்தின் பகுதிகளில் தடவவும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவவும்.
- வால்நட்டை உரித்து அவற்றின் தோலைப் பிரிக்கவும். இப்போது இந்த தோல்களை மிக்ஸி கிரைண்டரில் நன்றாக அரைத்து, பின்னர் அதில் தேன் சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை விரல்களில் வைத்து முகத்தில் மெதுவாக மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவவும்.
- கற்றாழை ஜெல்லில் மஞ்சளை கலந்து பேஸ்ட் தயார் செய்யவும். இந்த பேஸ்டை முகத்தில் தேவையற்ற முடி வளர்ந்த பகுதிகளில் தடவவும். பேஸ்ட் காய்ந்ததும் சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவவும். தொடர்ந்து பயன்படுத்தினால், முடி வளர்ச்சி குறையும்.
குறிப்பு
அனைவரின் சருமமும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வாமை அல்லது உணர்திறன் பிரச்சனை இருந்தால் தவிர்ப்பது நல்லது.
பேஸ்ட்டை ஒருபோதும் வேகமாக மசாஜ் செய்யாதீர்கள், இதனால் சொறி ஏற்படும் அபாயத்தை உருவாக்குகிறது. பேஸ்ட்டை முகத்தில் லேசாக தேய்ப்பதுதான் சிறந்த வழி.