புதிய Renault Duster SUV விரைவில் சந்தைக்கு வரும்., மிரளவைக்கும் தோன்றத்துடன் கசிந்த படங்கள்.!
பிரெஞ்சு ஆட்டோமொபைல் நிறுவனமான ரெனால்ட் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காரான டஸ்டர் எஸ்யூவியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
முன்னதாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எஸ்யூவி லேட்டஸ்ட் அப்டேட்களுடன் நவம்பர் 29ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது புதுப்பிக்கப்பட்ட உட்புறங்கள் மற்றும் புதிய எஞ்சினுடன் குறிப்பாக அதிநவீன தோற்றத்துடன் வருகிறது Renault Duster SUV.
Duster அதன் பிரித்தானிய கூட்டு நிறுவனமான Dacia-வுடன் இணைந்து புதுப்பிக்கப்பட்டது. ஆனால் ரெனால்ட் டஸ்டர் பற்றிய பல விவரங்கள் வெளியிடப்படுவதற்கு முன்பே கசிந்தன.
இந்த புதிய புதுப்பிக்கப்பட்ட ரெனால்ட் டஸ்டர் முதலில் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும். இந்த கார் Hyundai Creta, Tata Nexon மற்றும் Kia Seltosக்கு போட்டியாக இருக்கும் என்று சந்தை வட்டாரங்கள் கணித்துள்ளன.
புதிய ரெனால்ட் டஸ்டர் எஸ்யூவி பற்றிய கூடுதல் விவரங்களைப் பார்ப்போம்..
ரெனால்ட் டஸ்டர் CMF-B இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே புதிய டஸ்டர் ICE அவதாரத்துடன் Hybrid மற்றும் CNG வகைகளில் வரலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த இயங்குதளம் எதிர்காலத்தில் வரும் ரெனால்ட் டஸ்டர் EV-யிலும் பயன்படுத்தப்படலாம்.
டிசைனில் பல மாற்றங்களுடன் புதிய டஸ்டர் வரவுள்ளது. இது புதிய LED லைட்டுகள், புதிய கிரில் மற்றும் updated air intake-உடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு தோற்றம் மிகவும் கவர்ச்சியானது. பின்புறத்தில், புதிய டஸ்டர் Y- வடிவ லைட் க்ளஸ்டர்கள், ஸ்பாய்லர்களுடன் சாய்வான பின்புற விண்டோவுடன் கவர்ச்சிகரமான தோற்றத்துடன் வரும்.
ரெனால்ட் டஸ்டர் உட்புறமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. டஸ்டர் எஸ்யூவி இருக்கை அமைப்புகள் மற்றும் பிற மாற்றங்களுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டேஷ்போர்டுடன் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது.
டஸ்ட்டர் 8 அங்குலங்களுக்கும் குறைவான அளவிலான பாரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜர், சன்ரூஃப், automatic climate control மற்றும் வயர்லெஸ் இணைப்பு ஆகியவற்றுடன் வருகிறது.
ரெனால்ட் டஸ்டர் பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் பவர் ட்ரெயின்களுடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய எஞ்சின் ரெனால்ட்டின் 1.2 லிட்டர் மைல்ட் ஹைப்ரிட் யூனிட்டை உள்ளடக்கியிருக்கலாம். இந்த எஞ்சின் 130 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும். மேலும், இயந்திரங்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வர வாய்ப்புள்ளது. ஆனால் ரெனால்ட் டஸ்டர் இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Renault to launch Duster SUV's new iteration, New Renault Duster SUV Car, Renault Duster 2023