நிறுவனத்தின் தரவுதளத்தை மொத்தமாக அழித்துவிட்டு பொய் கூறிய AI
AI தொழில்நுட்பம் நாளுக்குநாள் பல்வேறு துறைகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதன் மூலம், மனிதர்கள் தங்களின் பல்வேறு கடினமான வேலைகளை எளிமையாக செய்து முடிக்க முடிகிறது.
அதேவேளையில், AI செயலிகளின் சில சமீபத்திய செயல்பாடுகள் அதன் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்து கவலை எழுப்புகிறது.
Replit AI
Replit என்பது உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படும் AI குறியீட்டு தளங்களில் ஒன்றாகும். இது பயனர்கள் தங்கள் உலாவியில் இருந்து நேரடியாக மென்பொருளை எழுத, சோதிக்க மற்றும் பயன்படுத்த அனுமதிக்கிறது. இதில் 30 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர்.
இதில் பயனர்கள் தங்கள் நோக்கத்தை எளிய பேச்சைப் பயன்படுத்தி வெளிப்படுத்தினால், AI அதை செயல்படுத்தக்கூடிய கோடாக மாற்றுகிறது. இது Vibe coding எனப்படும்.
தரவுகளை அழித்து பொய் சொன்ன AI
இந்நிலையில், AI யால் தமக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து SaaStr தளத்தின் நிறுவனர் லெம்கின் பதிவிட்டுள்ளார்.
லெம்கின், Replit AI யை பயன்படுத்தி ஒரு செயலியை உருவாக்க முயற்சித்துள்ளார்.
இதன் 9வது நாளில், அந்த நிறுவனத்தின் தரவுகளை அணுகிய இந்த AI, உரிமையாளரின் அனுமதியின்றி, 1,200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் 1,100 நிறுவனங்களின் பதிவுகளைக் கொண்ட முழு நேரடி தயாரிப்பு தரவுத்தளத்தை அழித்துள்ளது.
Vibe Coding Day 9,
— Jason ✨👾SaaStr.Ai✨ Lemkin (@jasonlk) July 18, 2025
Yesterday was biggest roller coaster yet. I got out of bed early, excited to get back @Replit despite it constantly ignoring code freezes
By end of day, we rewrote core pages and made them much better
And then -- it deleted our production database. 🧵
இது குறித்து AI யிடம் கேட்ட போது, அது போலியாக 4000 பயனர்களின் தரவுகளை உருவாக்கி காட்டி தனது தவறை மறைத்து பொய் கூறி வந்துள்ளது. இறுதியாக அது வேண்டுமென்றே பொய் சொன்னதாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியது.
ரெப்ளிட்டின் ரோல்பேக் அமைப்பைப் பயன்படுத்தி சேதத்தை சரிசெய்ய முயற்சித்ததாகவும், ஆனால் தரவுத்தளத்திற்கான ரோல்பேக் ஆதரிக்கப்படவில்லை என்றும் லெம்கின் கூறினார். இருப்பினும், பின்னர் ரோல்பேக் வேலை செய்ததாகத் தெரியவந்தது.
Replit CEO கருத்து
இது குறித்து Replit CEO அம்ஜத் மசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தரவை நீக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் ஒருபோதும் சாத்தியமில்லை.
We saw Jason’s post. @Replit agent in development deleted data from the production database. Unacceptable and should never be possible.
— Amjad Masad (@amasad) July 20, 2025
- Working around the weekend, we started rolling out automatic DB dev/prod separation to prevent this categorically. Staging environments in… pic.twitter.com/oMvupLDake
Replit சூழலின் பாதுகாப்பு மற்றும் வலிமையை மேம்படுத்த நாங்கள் விரைவாக நகர்கிறோம். முழு பிரேத பரிசோதனை விசாரணை மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகளை விரைவாக வெளியிடுவோம் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |