பிரித்தானிய சிறைகளில் 1,000 துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு: வெளியான அதிர்ச்சியூட்டும் அறிக்கை
பிரித்தானிய சிறைகளில் கடந்த 13 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
1,000க்கும் மேற்பட்ட துஷ்பிரயோக சம்பவங்கள்
பிரித்தானியாவில் 2010 முதல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சிறைகளில் 1,000க்கும் மேற்பட்ட கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக Guardian செய்தி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதே காலகட்டத்தில் அப்சர்வர் மூலம் பெறப்பட்ட பிரத்தியேக தரவுகளின்படி, கூடுதலாக 2,336 பாலியல் வன்கொடுமைகள் காவல்துறையில் பதிவாகியுள்ளன.
Representative Purpose only Credit: PA
ஆனால், அனைத்து தாக்குதல்களும் பதிவாகவில்லை என்பதால், கொடூரமான குற்றங்களின் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக கார்டியனின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தத் தரவுகளில், ஊழியர்கள்-கைதிகள் மற்றும் கைதிகள்-கைதிகள் துஷ்பிரயோகம் ஆகிய இரண்டு வழக்குகளும் அடங்கும்.
இந்த திடுக்கிடும் புள்ளிவிவரங்கள், கைதிகளின் பாதுகாப்பு தொடர்பிலும் பாலியல் வன்கொடுமை பிரச்சினையை தீர்ப்பதில் சிறை அமைப்பின் செயல்திறன் பற்றிய கேள்விக;ளை எழுப்பியுள்ளன.
Representative Purpose only Credit: Telegraph
சிறைத்துறையின் நிலை?
செப்டம்பர் 2022 நிலவரப்படி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள சிறைகளில் 52 சதவீத சிறைகள் ஏராளமான கைதிகளால் நெரிசலில் மூழ்கியிருப்பதாக அரசாங்க அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் தற்போது 90,000-க்கும் குறைவான மக்கள் சிறையில் உள்ளனர் என்று கார்டியன் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, அரசாங்கம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆயிரக்கணக்கான புதிய சிறைச்சாலைகளை உருவாக்க 500 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவியை அறிவித்தது. இருப்பினும், கைதிகளுக்கான இடம் மட்டுமல்ல, ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் தக்கவைப்பதற்கும் முடியாமல் சிறைத்துறை போராடி வருகிறது.