காற்று மாசினால் இந்த ஆபத்து ஏற்படும்! அதிரவைத்த ஆய்வறிக்கை

By Sivaraj Jan 17, 2024 12:31 PM GMT
Report

அதிகப்படியான காற்று மாசினால் பக்கவாதம் ஏற்படலாம் என ஆய்வறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.

ஆய்வறிக்கை

குளிர்காலத்தில் நம் உடலில் ரத்த ஓட்டம் துரிதமாக இருக்காது. இந்த சூழலில் பக்கவாதம் (Paralysis) ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறது இந்த ஆய்வு.

காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகராக உள்ள டெல்லி குறித்து வெளியான ஆய்வில், நாட்டிலேயே மிக அதிகபட்சமாக காற்று மிக மோசமான தரத்துடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது. 

report says air pollution cause paralysis ANI

பக்கவாதம்

குளிர்காலத்தில் மூளை மற்றும் உடலின் இதர பாகங்களுக்கு ரத்தத்தை சுமந்து செல்லும் நரம்புகள் சுருக்கமடையும். இதனால் போதுமான அளவுக்கு ரத்த ஓட்டம் இன்றி, ரத்த அழுத்தம் அதிகரிப்பதால் பக்கவாதம் ஏற்படலாம்.

வாகனங்கள், வீட்டில் பயன்படுத்தும் எரிபொருள், நம்மை சுற்றியுள்ள தொழிற்சாலைகள், ஆலைகள் போன்றவற்றால் காற்று மாசுபடுகிறது. இதனால் நைட்ரஜன் ஆக்ஸைடு கலந்த காற்றை நாம் சுவாசிக்கும் நிலை ஏற்படுகிறது. 

report says air pollution cause paralysis 

இவை தவிர, காட்டுத் தீ அல்லது சுற்றுப்புற பகுதிகளில் பற்றும் தீ போன்றவற்றால் எழும் புகையால் நமக்கு இதய நோய் முதல் பல்வேறு வகையிலான உடல்நல பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதுபோல தான் பக்கவாதமும் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதாவது, மாசடைந்த காற்றை சுவாசிக்கும்போது நம் ரத்தநாளங்களில் கொலஸ்ட்ரால் படிவதற்கு வாய்ப்பு உள்ளதால், இதன் தொடர்ச்சியாக பக்கவாதம் ஏற்படுமாம். 

report says air pollution cause paralysis PTI

நுண்ணிய மாசு பொருட்கள் போன்றவை, சுவாசத்தின் வழியாக நம் உடலில் புகுந்து மூளைக்கு செல்கிற ரத்த நாளங்களில் அடைப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்கிறது இந்த ஆய்வு.

தடுக்க என்ன செய்யலாம்?

  • இந்தப் பிரச்சனையில் சிக்காமல் இருக்க முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லலாம்.
  • ஒருநாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • அதேபோல் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பு: ஏற்கனவே நுரையீரல் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் இந்த விடயத்தில் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.   

report says air pollution cause paralysis Pressmaster/Shutterstock

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US