பிரான்சின் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளால் பயனில்லை: கசிந்த தகவல்கள்
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த இருநாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
அத்துடன், பிரான்ஸ் அதிகாரிகள் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த சமீபத்தில் சில புதிய நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளார்கள்.
கட்டுப்பாடுகளால் பயனில்லை
பிரான்ஸ் அதிகாரிகள் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக, புலம்பெயர்வோர் பயணிக்கும் ரப்பர் படகுகளை கத்தியால் குத்திக் கிழிப்பது, கடலுக்குள் இறங்கி புலம்பெயர்வோரைத் தடுப்பது முதலான சில புதிய நடவடிக்கைகளை சமீபத்தில் துவக்கியுள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், அந்த நடவடிக்கைகளையும் மீறி சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்துவருவது தெரியவந்துள்ளது.
சொல்லப்போனால், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில், அதாவது, 2025இல் பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ள புலம்பெயர்வோர் எண்ணிக்கை 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டில் பிரித்தானியாவுக்குள் நுழைந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை சுமார் 21,000.
சமீபத்தில், கடலோர பாதுகாப்புப் படையின் சில ஆவணங்கள் பிரித்தானிய ஊடகம் ஒன்றிற்கு கசியவிடப்பட்டதைத் தொடர்ந்து இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |