CSK அணியில் களமிறங்கும் இலங்கையின் மிரட்டல் வீரர்? வெளியான தகவல்
ஐபிஎல் 2023 தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை கேப்டன் தசுன் ஷானக களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைல் ஜேமிசன்
ஐபிஎல் எனும் இந்திய பிரீமியர் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 25ஆம் திகதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் இடம்பெற்றிருந்தார்.
ஆனால், காயம் காரணமாக அவர் சில மாதங்கள் விளையாட முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக நான்கு வீரர்கள் ஜேமிசனுக்கு மாற்று வீரராக களமிறங்க பரிசீலணையில் உள்ளனர்.
Prachi
இலங்கை கேப்டன்
அவர்களில் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷானகவும் ஒருவர். சிறந்த ஆல்ரவுண்டர் வீரரான இவர் ஜேமிசனுக்கு சரியான மாற்று வீரராக இருப்பார்.
ஏனெனில், இந்திய ஆடுகளங்களில் சிறப்பாக செயல்பட்ட தசுன் ஷானக, தரமான Finisher வீரர் ஆவார். அதேபோல் இக்கட்டான சூழலில் பந்துவீசி விக்கெட்டையும் பெற்றுத்தரக்கூடிய வீரராக இருப்பதால் நிச்சயமாக CSK அணியில் தசுன் ஷானக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
@ Ishara S Kodikara/ AFP
எனினும், தசுன் ஷானக தவிர்த்து வெய்ன் பர்னெல் (தென் ஆப்பிரிக்கா), லன்ஸ் மோரிஸ் (அவுஸ்திரேலியா), ஜெரால்டு கோட்ஸி (தென் ஆப்பிரிக்கா) ஆகியோரும் இதில் உள்ளனர்.