ஜேர்மனியில் அதிக வருவாய் ஈட்டுபவர்கள் இந்த நாட்டவர்கள்தானாம்... ஆய்வு முடிவுகள்
ஜேர்மனியில் பணியாற்றும் வெளிநாட்டவர்களிலேயே, இந்தியர்கள்தான் அதிக வருவாய் ஈட்டுகிறார்கள் என்கிறது சமீபத்திய ஆய்வொன்று.
அதிக வருவாய் ஈட்டுபவர்கள்
ஜேர்மன் பணியாளர்களின் சராசரி வருவாய், 4,177 யூரோக்கள். அது, சில துறைகளில் பணியாற்றும் இந்தியப் பணியாளர்களின் வருவாயை விட சுமார் 1,200 யூரோக்கள் குறைவு என Institute of the German Economy (IW) என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறையில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துவதே அவர்கள் அதிக ஊதியம் பெறக் காரணம் என்கிறது அந்த ஆய்வு.
பொதுவாக, ஜேர்மனியில் பணியாற்றும் வெளிநாட்டுப் பணியாளர்கள் 3,204 யூரோக்கள் வருவாய் ஈட்டுவதாகவும், இந்தியப் பணியாளர்களின் வருவாயோ, 2024இல் 5,393 யூரோக்களை எட்டியதாகவும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
அதே காலகட்டத்தில் ஆஸ்திரியா நாட்டவர்கள் ஈட்டிய வருவாய், 5,322 யூரோக்கள், அமெரிக்கப் பணியாளர்கள் ஈட்டிய வருவாய், 5,307 யூரோக்கள் மற்றும் அயர்லாந்து நாட்டவர்கள் ஈட்டிய வருவாய் 5,233 யூரோக்கள்.
விடயம் என்னவென்றால், கணிதம், தகவல் தொழில்நுட்பம், இயற்கை அறிவியல் மற்றும் பொறியியல் முதலான தொழில்நுட்பத் துறைகளில் பணியாற்றும் இந்தியர்கள் எண்ணிக்கை 2012ஐ ஒப்பிடும்போது ஒன்பது மடங்கு அதிகரித்து 32,800ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |