ஒன்லைன் ஷாப்பிங்: மக்களை கடனாளிகளாக்கும் விடயம்
சுவிட்சர்லாந்தில், ஒன்லைன் ஷாப்பிங்கால் மக்கள் கடனாளிகளாவதாக நுகர்வோர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மக்களை கடனாளிகளாக்கும் விடயம்
’இப்போது பொருளை வாங்கிக்கொள்ளுங்கள், பிறகு பணம் கொடுத்தால் போதும்’ என ஆசை காட்டும் ஒன்லைன் நிறுனங்களால், பலரும் கடனாளிகள் ஆகிவருவதாக நுகர்வோர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, அடுத்த ஆண்டின் இறுதி நிலவரப்படி, மக்கள் பொருட்கள் வாங்கிவிட்டு செலுத்தாத தொகை, 13 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை எட்டக்கூடும் என்கிறார்கள் சம்பந்தப்பட்ட துறையினர்.
13 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் என்பது இலங்கை மதிப்பில் 54,40,20,43,96,900.00 ரூபாய் ஆகும்!
குறிப்பாக, 20 முதல் 40 வயதுடையவர்கள், இந்த ஒன்லைன் ஷாப்பிங் வசதியாக இருப்பதால், முன்பின் யோசிக்காமல் தங்களால் திரும்பச் செலுத்த முடியாத அளவுக்கு பொருட்களை வாங்குகிறார்களாம்.
பட்ஜெட் போட்டு பழக்கம் இல்லாத இந்த வயதுடையவர்களை இந்த ஒன்லைன் ஷாப்பிங் ஆஃபர்கள் கடனாளிகளாக்குவதாக நுகர்வோர் அமைப்புகள் கூறுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |