நடிகர் விஜய் கூட மன்சூர் அலிகான் மாதிரி பேசியிருக்கிறார்! குரல் கொடுக்க பயப்படுகிறார்..குற்றம்சாட்டிய பத்திரிகையாளர்
மன்சூர் அலிகான் பேசியது போல் நடிகர் விஜய் கூட கதாநாயகி குறித்து மேடையில் பேசிருக்கிறார் என்று பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.
நடிகை திரிஷாவை குறிப்பிட்டு நடிகர் மன்சூர் அலிகான் தவறாக பேசியது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊடங்கங்களில் இது விவாதப் பொருளாக மாறியுள்ளதுடன், பலரும் மன்சூர் அலி கானுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் அவருக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி நடிகர் விஜய்யை குறிப்பிட்டு குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில்,
'திரிஷா விவகாரத்தில் கேள்வி எழுப்ப நடிகர் விஜய்க்கு கூடுதல் பங்கு உள்ளது. உங்களுடன் நடித்த ஒரு நடிகைக்கு நேர்கிற ஒரு அநீதிக்கு எதிராகவே குரல் கொடுக்க அஞ்சுகிற நீங்களா, நாளைக்கு தமிழ்நாட்டிற்காக குரல் கொடுத்து காவிரியில் இருந்து தண்ணீர் வாங்கி தரப்போகிறீர்கள்.
இதற்கு முன்பு வேட்டைக்காரன் பட விழாவில் அனுஷ்கா குறித்து விஜய் இதுபோல் பேசியிருக்கிறார். அவர் மட்டுமல்ல ராதா ரவி, ரோபோ ஷங்கர் என பல நடிகர்கள் நடிகைகள் குறித்து தவறாக பேசியிருக்கிறார்கள்' என காட்டமாக பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |