போலி தேசமா கைலாசா? 30 நகரங்களை ஏமாற்றிய நித்யானந்தா! வெளியான ஊடக அறிக்கை
அமெரிக்காவின் 30 நகரங்களை நித்யானந்தா ஏமாற்றி, அந்த தேசத்துடன் கலாச்சார கூட்டாண்மைக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
கைலசா நாடு
சர்ச்சைக்குரிய நபரான நித்யானந்தா ''கைலாசா'' என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாகவும், ஐ.நா சபை அதற்கு அங்கீகாரம் அளித்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் 30 நகரங்களை Sister City ஒப்பந்தம் என்ற பெயரில் நித்யானந்தா ஏமாற்றியதாக தற்போது அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக Fox News வெளியிட்டுள்ள செய்தியில், போலி தேசத்தில் வீழ்வது மேயர்கள் அல்லது நகர சபைகள் மட்டுமல்ல, மத்திய அரசாங்கத்தை நடத்துபவர்களும் வீழ்ச்சியடைகிறார்கள்.
City of Newark, New Jersey admits it got scammed into becoming “sister cities” with a fake nation. @CBSNewYork https://t.co/QD0nmin7V5 pic.twitter.com/7NiizmUP5M
— Ali Bauman (@AliBaumanTV) March 9, 2023
போலி தேசம்
மேலும் இதுகுறித்து Fox News தொகுப்பாளர் ஜெஸ்ஸி வாட்டர்ஸ் கூறுகையில், 'நித்யானந்தா ஏமாற்றிய நகரங்களின் நீண்ட பட்டியல் உள்ளது. இதுவரை பெரும்பாலான நகரங்கள் இந்த அறிவிப்புகள் உண்மை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இரண்டு உறுப்பினர்கள் உள்ள காங்கிரஸால் கைலாசாவிற்கு சிறப்பு காங்கிரஸ் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
எனவே, எங்கள் வரி டொலர்களை எதற்காக செலவிடுகிறோம் என்பதை தீர்மானிக்கும் நபர், போலி நாட்டைக் கொண்ட கற்பழிப்பு குருவால் ஏமாற்றப்பட்டார்' என தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.