உலகக் கோப்பையில் இருந்து விலகும் இந்திய அணியின் முக்கிய வீரர்? வெளியான தகவல்
காயம் காரணமாக ஏற்கனவே தீபக் சாஹர் பல போட்டிகளை தவறவிட்டிருந்தார்
இந்திய அணி நிர்வாகம் தரப்பில் தீபக் சாஹர் விலகுவது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை
டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி பந்துவீச்சாளர் தீபக் சாஹர் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் வரும் 16ஆம் திகதி டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. இதற்காக ஒவ்வொரு அணியும் தயாராகி வருகின்றன.
ANI
தென் ஆப்பிரிக்காவுடனான டி20 தொடரை முடித்தவுடன் இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது. இந்த நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், பெங்களூரில் நடைபெற்ற உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததால் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து அவர் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் களமிறங்குவார் என்றும் கூறப்படுகிறது. பந்துவீச்சு மட்டுமின்றி துடுப்பாட்டத்திலும் அணிக்கு உதவும் வீரரான தீபக் சாஹர் விலகுவது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் கருதப்படுகிறது.