ரொனால்டோவுக்கும் அல் நஸர் பயிற்சியாளருக்கும் மோதலா? வெளியான தகவல்
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆட்டத்துடன் அல் நஸர் பயிற்சியாளர் முரண்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிராவில் முடிந்த போட்டி
கடந்த 10ஆம் திகதி நடந்த அல் நஸர் மற்றும் அல் பெய்ஹா அணிகளுக்கு இடையிலான போட்டி கோல்கள் இன்றி டிராவில் முடிந்தது.
இதனால் புள்ளிப்பட்டியலில் அல் நஸர் அணி இரண்டாவது இடத்திலேயே தொடர்கிறது. இதன் காரணமாக ரொனால்டோவின் தந்திரோபாய அணுகுமுறையில் பயிற்சியாளர் கார்சியா மகிழ்ச்சியடைவில்லை என்று கூறப்படுகிறது.
பயிற்சியாளரை விமர்சித்த ரொனால்டோ
சவூதி பத்திரிகைகளின் அறிக்கையின்படி, கார்சியா தனது வீரர்களை அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், ஏனெனில் அவர்கள் தொடர்ந்து சாம்பியன் ஆவதற்கு வாய்ப்பு இருப்பதாக ரொனால்டோ கருதுகிறார்.
இதன்மூலம் பயிற்சியாளருடன் ரொனால்டோவுக்கு மோதல் போக்கு இருப்பதாகவும், கார்சியாவின் பதவிக்கு கடுமையான அச்சுறுத்தல் இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
@AFP
இதற்கிடையில் அணிக்கு இருக்கும் திறமையைக் கருத்தில் கொண்டு, சவுதி புரோ லீக்கை வெல்ல முடியும் என்று ரொனால்டோ கருதுகிறார். முன்னதாக, போட்டியின் முடிவால் ரொனால்டோ திரைக்குப் பின்னால் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
கடந்த 2022ஆம் ஆண்டு அல் நஸரின் பயிற்சியாளர் பொறுப்பை கார்சியா ஏற்றுக் கொண்ட பின்னர், அந்த அணி 26 போட்டிகளில் 18 வெற்றிகள், 3 தோல்விகள் மற்றும் 5 டிரா கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.