ஹரி மேகன் ஓபரா பேட்டியைத் தொடர்ந்து சுவிஸ் நிறுவனம் ஒன்றிற்கு குவியும் கோரிக்கைகள்: ஒரு வேடிக்கை செய்தி
பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் ஓபரா வின்ஃப்ரேக்கு அளித்த பேட்டி, சுவிட்சர்லாந்தில் சற்றும் எதிர்பாராத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பேட்டியைத் தொடர்ந்து சுவிஸ் நிறுவனம் ஒன்றிற்கு கோரிக்கைகள் குவிகின்றனவாம். அது எந்த நிறுவனம், என்ன கோரிக்கைகள் குவிகின்றன என்று பார்த்தால், சரியான வேடிக்கை விடயம் ஒன்று நடந்துள்ளது.
ஓபரா வின்ஃப்ரே பேட்டியின்போது, அவர் அணிந்திருந்த கண் கண்ணாடி, சுவிஸ் மக்களை வெகுவாக கவர்ந்துவிட்டதாம். ஆகவே, அதேபோல் கண்ணாடிகள் செய்யக்கோரி சூரிச்சிலுள்ள Gotti என்ற கண் கண்ணாடி நிறுவனத்திற்கு ஆர்டர்கள் குவிகின்றனவாம்.
இன்னொரு ருசிகர தகவல் என்னவென்றால், வின்ஃப்ரே அணிந்திருந்த அந்த கண்ணாடியை வடிவமைத்ததே Götti நிறுவனரான Sven Göttiதான்.
ஹரி மேகன் பேட்டிக்காக, Götti இரண்டு கண் கண்ணாடிகளை வின்ஃப்ரேக்கு வடிவமைத்துக் கொடுத்தாராம். அவை இரண்டுமே அவருக்கு பிடித்துப்போக, அவை இரண்டையுமே வாங்கிக்கொண்டாராம் அவர்.
மேலும், அதற்குப் பிறகு, 20 ஜோடி கண்ணாடிகளை ஆர்டர் செய்துள்ளாராம் வின்ஃப்ரே. இதற்கிடையில், அந்த பேட்டி வெளியானதைத் தொடர்ந்து ஏராளமானோர் அதேபோல் கண் கண்ணாடிகள் வேண்டும் என கேட்டு Götti நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்களாம்.
அதனால், Götti நிறுவனத்தின் 30 பேர் கொண்ட குழு, தீவிரமாக கண் கண்ணாடிகளை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளதாம்!
If you caught @Oprah's interview with Prince Harry & the Duchess of Sussex Meghan Markle, you spotted her stunning specs—the @gottiframes OR02. And, in honor of #internationalwomensday, stay tuned here for insights from the stellar #optician who fit the icon with those Gottis. ? pic.twitter.com/2G0Z86cgt7
— Eyecare Business Mag (@eyecarebusiness) March 8, 2021