லண்டனில் கத்தியால் குத்தப்பட்ட பெண்ணைக் காப்பாற்றுவதற்காக காரை மோதியதால் கைது செய்யப்பட்டுள்ள நபரின் கோரிக்கை
லண்டனில் பட்டப்பகலில் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திக்கொண்டிருந்தவரிடமிருந்து அவரைக் காப்பாற்றுவதற்காக அவர் மீது காரை ஏற்றியதற்காக ஹீரோவாக கொண்டாடப்படும் நபர் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
திங்கட்கிழமை காலை, Yasmin Wafah Chkaif (43) என்னும் பெண், தனது முன்னாள் கணவரான Leon McCaskre (41) என்பவரால் நடுரோட்டில் கொடூரமாக கத்தியால் தாக்கப்பட்டார்.
Wafahவைக் காப்பாற்றுவதற்காக தனது காரைக் கொண்டு Leon மீது மோதினார் ஒருவர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, கார் மோதியதில் Leon உயிரிழந்ததோடு, Wafahவும் இறந்துவிட்டார்.
ஆகவே, பொலிசார் அந்த காரை ஓட்டியவரைக் கைது செய்தார்கள்.
தற்போது, அந்த நபர் பெயர் ஆப்ரஹாம் (26) என தெரியவந்துள்ளது. செசன்யா நாட்டவரான ஆப்ரஹாம், தன் கண் முன்னே ஒரு பெண் கொடூரமாகத் தாக்கப்படுவதைக் காண சகியாமல், தாக்குபவர் மீது காரை மோதியுள்ளார்.
கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள ஆப்ரஹாம், தான் Leonஐக் கொல்லவேண்டும் என்று எண்ணி அவர் மீது காரை மோதவில்லை என்றும், அவர் அந்தப் பெண்ணைத் துன்புறுத்துவதைத் தடுப்பதற்காகவே அவர் மீது காரை மோதியதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆப்ரஹாம் வெளியிட்டுள்ள அறிக்கையை அவரது சட்டத்தரணியாகிய Mohammed Akunjee வெளியிட்டுள்ளார்.
அத்துடன், ஒருவரைக் காப்பாற்றவேண்டுமென்ற எண்ணத்தில் செயல்பட்ட தன்னை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஜாமீனில் விட்டதற்கு பதிலாக, தன்னை ஏன் பொலிசார் மீண்டும் கைது செய்து ஒரு சாட்சியாக நடத்தக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையில், ஆப்ரஹாம் ஒரு ஹீரோ என்றும், அவர் மீது கொலைக்குற்றம் சாட்டக்கூடாது என்றும், அதற்கு பதிலாக அவரை கௌரவிக்கவேண்டும் என்றும் கோரி முன்வைத்துள்ள மனுவில் 20,000க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.