சுவிஸ் குடியுரிமை பெறுவதை மேலும் கடினமாக்கும் சுவிஸ் மாகாணத்தின் கோரிக்கை
பொதுவாகவே சுவிஸ் குடியுரிமை பெறுவது கடினமான ஒரு விடயம். சொல்லப்போனால், சுவிஸ் நாட்டில் குடியுரிமை பெறுவதுதான் உலகிலேயே கடினமான விடயம் என்று கூட சொல்வார்கள்.
இந்நிலையில், அதை மேலும் கடினமாக்க சுவிஸ் மாகாணம் ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
மொழித்தேவையை கடினமாக்கக் கோரிக்கை
சுவிஸ் மாகாணமான Zug, வெளிநாட்டவர்கள் குடியுரிமை பெறுவதற்கான தற்போதைய மொழிப்புலமை போதுமானதல்ல என கருதுகிறது.
ஆகவே, Swiss People’s Party கட்சியின் உறுப்பினர்கள், மொழிப்புலமையை அதிகரிக்கவேண்டுமெனக் கோரும் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
Zug மாகாண அரசியல்வாதிகள், சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு பேச்சுவழக்குக்கு B2 மட்டத்திலும், எழுதுவதில் B1 மட்டத்திலும் மொழிப்புலமை பெற்றிருக்கவேண்டும் என கோருகின்றனர்.
ஏற்கனவே கடினமாக்கப்பட்ட குடியுரிமைநடைமுறை
2018ஆம் ஆண்டு, சுவிஸ் குடியுரிமை பெறுதல் மேலும் கடினமாக்கப்பட்டது.அப்போது C உரிமை வைத்திருப்போர் மட்டுமே குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற நடைமுறை அமுல்படுத்தப்பட்டது.அதைத் தொடர்ந்து குடியுரிமை பெறுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.
இந்நிலையில், அதை இன்னமும் கடினமாக்க Zug மாகாண அரசியல்வாதிகள் தற்போது முயற்சி செய்கிறார்கள்.
ஆனாலும், இன்னொரு பக்கம், தேசிய அளவில் குடியுரிமை பெறுதலை எளிதாக்க சிலர் கோரி வருகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை!
Marlon Trottmann | Dreamstime.com