சுவிஸ் பனிப்பாறைச்சரிவு: ஆய்வாளர்கள் கூறும் தகவல்
சமீபத்தில் சுவிஸ் கிராமம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர பனிப்பாறைச்சரிவுக்கு பருவநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சுவிஸ் பனிப்பாறைச்சரிவு
சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர பனிப்பாறைச்சரிவில், Blatten என்னும் கிராமமே கிட்டத்தட்ட மண்ணில் புதைந்தது.
இந்நிலையில், அந்த பனிப்பாறைச்சரிவுக்கு பருவநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என சூரிக்கிலுள்ள ஃபெடரல் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், இந்த ஃபெடரல் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள்தான், பனிப்பாறைச்சரிவு ஏற்படலாம் என முன்கூட்டியே Blatten கிராம மக்களை எச்சரித்தார்கள்.
ஆகவேதான், முகூட்டியே அந்த கிராம மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டார்கள், அதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |