ஜேர்மானியர்கள் சைவம் உண்பவர்களாக மாறுகிறார்களா? ஆய்வு முடிவுகள்
Germans used to be all about sausages and meat. But, things seem to be slowly changing: ஜேர்மானியர்களின் உணவுப்பழக்கத்தில் சமீப காலமாக சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஜேர்மானியர்கள் வகை வகையான சாசேஜ்களையும் மாமிசங்களையும் உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். ஆனால், சமீப காலமாக, அவர்களுடைய உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் காணப்படுகின்றன.
ஜேர்மானியர்கள் சைவம் உண்பவர்களாக மாறுகிறார்களா?
அப்படியானால், ஜேர்மானியர்கள் சைவம் உண்பவர்களாக மாறுகிறார்களா என்பதை அறிய சமீபத்தில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வு முடிவுகள், 93 சதவிகித குடும்பங்கள் மாமிசம் வாங்குகிறார்கள் என்பதைக் காட்டியுள்ளன.
அதாவது, ஜேர்மானியர்கள் சைவம் உண்பவர்களாக மாறவில்லை. மாறாக, அவர்கள் மாமிசம் உண்ணுவதைக் குறைக்கத் துவங்கியுள்ளார்கள். குறிப்பாக, சாசேஜ் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.
தங்கள் டயட் குறித்து அதிக அக்கறை காட்டத் துவங்கியுள்ள ஜேர்மானியர்கள், மாமிசம் சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்தாமல், மாமிசத்தின் அளவைக் குறைத்துள்ளார்கள்.
ஆய்வில் பங்கேற்றவர்களில் சுமார் 43 சதவிகிதம் பேர், மாமிசத்தின் அளவைக் குறைப்பது நல்லது என கருதுவதால் தாங்கள் மாமிசத்தின் அளவைக் குறைத்துவருவதாகத் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், 27 சதவிகிதம் பேர், எதிர்காலத்தில் குறைவாகவே மாமிசம் வாங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.