காலை 11 மணிக்கு இந்த உணவை எழுத்துக்கொள்வது கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும்: British Heart Foundation
காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் ஒரு 11 மணி வாக்கில் ஒரு பசி வருவதை பலரும் அனுபவித்திருக்கலாம்.
பெரும்பாலும், ஒரு பிஸ்கட்டை கடித்துக்கொண்டு, ஒரு டீயை அருந்துவது பலரது வழக்கமாகிவிட்டது.
ஆனால், அப்படிச் செய்வதைவிட, இந்த உணவை எழுத்துக்கொள்வது நல்லது என்கிறார்கள் British Heart Foundation அமைப்பிலுள்ள இதயவியல் நிபுணர்கள்.
அந்த உணவு?
அந்த உணவு, வாழைப்பழம். ஆம், அந்த காலை பசிக்கு பிஸ்கட்டை உட்கொள்ளும்போது, அது உங்கள் இரத்த சர்க்கரை அளவைத்தான் அதிகரிக்குமேயொழிய, பசியை நீண்ட நேரத்துக்கு கட்டுப்படுத்தாது என்கிறார்கள் இதயவியல் நிபுணர்கள்.
அதே நேரத்தில், வாழைப்பழத்திலுள்ள இயற்கை சர்க்கரையும் கார்போஹைட்ரேட்களும் நீண்ட நேரத்துக்கு எனர்ஜி பூஸ்டாக அமையும் என்கிறார்கள் அவர்கள்.
ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், உடலில் கொலஸ்ட்ரால் அதிக அளவில் இருக்கும்போது, இரத்தக் குழாய்களின் உட்பக்க சுவர்களில் அந்த கொலஸ்ட்ரால் அப்படியே படிந்துவிடும் (deposits).
அப்படி கொலஸ்ட்ரால் இரத்தக் குழாய்களின் உட்பக்க சுவர்களில் படிவதால், இரத்தக் குழாய்களின் உள் சுற்றளவு குறையும். அதனால் இரத்தம் ஓடும் வேகம் குறையும்.
அப்போது, இரத்தத்தை உடலில் பல பகுதிகளுக்கு அனுப்ப, இதயம் அதிகம் கஷ்டப்படவேண்டியிருக்கும். அதனால், மாரடைப்பு முதலான பல்வேறு இதயப் பிரச்சினைகள் உருவாகக்கூடும்.
வாழைப்பழங்களில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. அது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு அத்தியாவசியமான ஒன்றாகும்.
பொட்டாசியம் உள்ள உணவுப்பொருட்களை அதிகம் எடுத்துக்கொள்வது, எடுத்துக்கொள்ளும் சோடியத்தின் அளவைக் குறைப்பதைவிட இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் நல்ல பலனைக் கொடுக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
உதாரணமாக, பொட்டாசியம் அதிகம் உள்ள ஒரு உணவை, ஒரு கிராம் அதிகம் நம் அன்றாட உணவுடன் சேர்த்துக்கொள்வது, அல்லது வேறு வகையில் கூறினால், நாளொன்றிற்கு இரண்டு வாழைப்பழங்களை உணவுடன் சேர்த்துக்கொள்வது, குறிப்பிடத்தக்க அளவில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
அத்துடன், வாழைப்பழத்திலுள்ள கரையும் தன்மை கொண்ட நார்ச்சத்து, இரத்த ஓட்டத்துக்குள் கொலஸ்ட்ரால் இழுத்துக்கொள்ளப்படுவதையும் (absorption into the bloodstream) குறைக்க உதவும்.
மேலும், முறையான உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுதல், மது அருந்துவதை கைவிடுதல், புகைப் பிடிப்பதை விடுதல் ஆகியவற்றுடன் நல்ல உணவுப்பழக்கங்களை பின்பற்றுதலும் நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
அந்த உணவுப்பழக்கங்களில் ஒன்று, பல நன்மைகளைக் கொடுக்கும் பழங்களை, குறிப்பாக வாழைப்பழம் போன்ற உணவுகளை உட்கொள்வதாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |