பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதால் நன்மை ஏற்படுமா? சுவிஸ் ஆய்வு முடிவுகள்
பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது தொடர்பில் சுவிஸ் பல்கலை ஒன்று ஆய்வொன்றை மேற்கொண்டது.
ஆய்வு முடிவுகள்
சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் அமைந்துள்ள EPFL பல்கலை, பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொண்டது.
ஆய்வின் முடிவுகள், வித்தியாசமான விடயம் ஒன்றைத் தெரிவித்துள்ளன. அதாவது, பொதுவாக எப்போதாவது பழங்கள் சாப்பிடுவதுகூட நன்மை பயக்கும் என நம்பப்படும் நிலையில், காய்கறிகள் பழங்களைக்கூட ஒழுங்கான கால இடைவெளியில், தொடர்ச்சியாக சாப்பிடுவது மட்டுமே நன்மை பயக்கும் என அந்த ஆய்வின் முடிவுகளில் தெரியவந்துள்ளது.
சொல்லப்போனால், எப்போதாவது பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவது, குடலிலுள்ள நல்ல நுண்ணுயிரிகள் ஏற்படுத்தும் நல்ல விளைவுகளை இல்லாமல் செய்துவிடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆக, தினமும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் மூன்று நேரம் சாப்பிடுவது, தினமும் ஏதாவது காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்வது, தினமும் சிறிது தயிர் போன்ற உணவுகளை உண்பது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, மன அழுத்தம் தூக்கமின்மையை முடிந்தவரை தவிர்ப்பது ஆகிய விடயங்கள் குடலின் நலனுக்கு நல்லது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |