வரவிருக்கும் பேராபத்து... பூமி கிழக்கு நோக்கி நகர்வதாக எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்!
நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு. மனிதர்கள் முதல் விலங்குகள் என அனைத்திற்கும் நீர் என்பது அத்தியாவசிய பொருளாக காணப்பகிறது.
நீர் இல்லை என்றால் இந்த உலகில் ஒரு உயிரினம் கூட உயிர்வாழ முடியாது.
இந்த நீரின் தேவையானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணத்தில் தான் உண்டு.
இதனாலேயே பூமியில் இருந்து அதிகளவிலான நிலத்தடி நீர் எடுக்கப்படுகிறது. அதிகளவிலான நிலத்தடி நீர் எடுப்பதால் பூமியின் நிலையானது மிக மோசமாகி விட்டதாக பல ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கிழக்கு நோக்கி நகரும் பூமி
அதிகளவிலான நிலத்தடி நீர் எடுக்கப்படுவதால் பூமி இரண்டு தசாப்தங்களுக்கும் குறைவான காலத்தில் கிழக்கு நோக்கி சுமார் 80 செ.மீ நகர்ந்துள்ளதாக சிடெக் டெய்லி தெரிவித்துள்ளது.
1993 மற்றும் 2010-க்கும் இடைப்பட்ட காலத்தில் மனிதர்கள் 2,150 ஜிகா டன் நிலத்தடி நீரை வெளியேற்றியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மேற்கு அமெரிக்கா மற்றும் வடமேற்கு இந்தியா தான் பெரும் நிலத்தடி நீரை பயன்படுத்தியுள்ளதாகவும் நிலத்தடி நீர் குறைவது பூமியின் சுழற்சி துருவங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என இந்த ஆய்வின் தலைமை அதிகாரி சியோல் நேஷனல் பல்கலைகழகத்தின் புவி இயற்பியலாளர் வென் சியோ தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |