நிலவில் தயாராகும் பிரம்மாண்ட ஹொட்டல்.., ஒரு நாள் தங்க எவ்வளவு விலை தெரியுமா?
சந்திரனில் கட்டப்பட உள்ள முதல் ஹோட்டலுக்கான முன்பதிவுகளை அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனம் GRU Space தொடங்கியுள்ளது.
இந்த ஹொட்டலில் தங்க விரும்பும் பயணிகள் மிகப் பெரிய தொகையை செலவிட வேண்டியிருக்கும்.
முன்பதிவு கட்டணம் ஒருவருக்கு சுமார் ₹2.2 கோடி முதல் தொடங்குகிறது. பின்னர் இது ₹9 கோடி வரை உயரக்கூடும்.
முழு பயணச் செலவு ₹90 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் நோக்கம், சந்திரனில் மனிதர்கள் நீண்ட காலம் தங்கக்கூடிய வசதிகளை உருவாக்குவதாகும்.
இதுவரை நாசாவின் அப்பல்லோ திட்டத்தின் மூலம் 12 விண்வெளி வீரர்கள் மட்டுமே சந்திரனில் கால் பதித்துள்ளனர்.
GRU Space நிறுவனம், 2032ஆம் ஆண்டுக்குள் சந்திரனில் மனிதர்கள் தங்கும் தளத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆரம்ப பணிகள் 2029ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான பொருட்களை நிலவின் மேற்பரப்பிற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

முன்பதிவு செய்ய, திரும்ப பெற முடியாத $1,000 (சுமார் ₹83,000) விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
தொழில்துறை தகவல்களின் படி, இந்த ஹொட்டலில் ஒரு இரவு தங்கும் கட்டணம் சுமார் 4 லட்சம் 10 ஆயிரம் டாலரிலிருந்து தொடங்கும் என மதிப்பிடப்படுகிறது.
அத்துடன், கடுமையான மருத்துவ மற்றும் பொருளாதார தகுதி சோதனைகளும் மேற்கொள்ளப்படும்.
இந்த திட்டத்தை, நிறுவனத்தின் 22 வயது நிறுவனர் ஸ்கைலர் சான் அறிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்த பயணக் கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |