Paytm சேவை நிறுத்தத்திற்கு கெடு நீட்டிப்பு
Paytm Payments வங்கி சார்ந்த செயல்பாடுகளை நிறுத்துவதற்கான கெடு திகதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி பிப்ரவரி 29ஆம் திகதி வரை Paytm Payments வங்கி சார்ந்த செயல்பாடுகளை நிறுத்துவதற்கான கெடு விதித்திருந்தது.
Paytm Payments தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வந்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், Paytm செயலில் மூலம் பயனர்கள் UPI பரிவர்த்தனை முறையின் கீழ் பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியும் என்றும் கூறப்பட்டது.
@PTI
இந்த நிலையில் வங்கி சார்ந்த செயல்பாடுகளை நிறுத்துவதற்கான கெடுவை மார்ச் 15ஆம் திகதி வரை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள அவர்களுக்கு போதுமான அவகாசம் கிடைக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த தடை காரணமாக வாடிக்கையாளர் கணக்கு, வாலட், FASTag போன்றவற்றில் டெபாசிட் அல்லது டாப்-அப் போன்ற Credit சேவை சார்ந்த பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது.
வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கு, நடப்பு கணக்கு, Prepaid வாலட், FASTag போன்றவற்றில் உள்ள இருப்புத் தொகையை பெறவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |