கனடாவின் ஆல்பர்ட்டாவிலும் 800 பள்ளி மாணவ மாணவியர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு... தொடர்ந்து வெளியாகும் திடுக் தகவல்கள்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Kamloops என்ற பகுதியில் அமைந்துள்ள பூர்வக்குடியின மணவ மாணவியர் பயிலும் உண்டுறை பள்ளி ஒன்றில் ராடார்கள் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டதில், அங்கு 215 சிறுவர் சிறுமியர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து கனடாவே அதிர்ந்தது.
இந்த தகவல் அறிந்ததும் தெற்கு ஆல்பர்ட்டாவில் அமைந்துள்ள St. Mary's உண்டுறை பள்ளி குறித்த நினைவு தனக்கு வந்ததாக தெரிவிக்கிறார் Jackie Bromley. தற்போது 70 வயதாகும் Jackie, தனக்கு 10 வயது இருக்கும்போது, தன்னுடன் படித்த மாணவர்கள் பள்ளிக்குப் பின்னால் இருக்கும் கல்லறைகளைப் பற்றி பேசிக்கொண்டது நினைவுக்கு வருவதாக தெரிவிக்கிறார்.
ஆனால், Jackie அங்கு சென்று பார்த்தபோது, பொதுவாக கல்லறைகளின் தலைப்பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் பெயர் பொறித்த கற்கள் எதையும் தான் பார்க்கவில்லை என்கிறார். ஆனால், Jackieயின் வகுப்பு மாணவ மாணவியர் கூறியது உண்மைதான்.
1945இல் இந்திய ஏஜண்ட் ஒருவர் பள்ளியின் முதல்வருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அந்த உடல்கள் மேலோட்டமாக புதைக்கப்பட்டிருந்ததால், அவற்றை மீண்டும் தோண்டி எடுத்து, ஆழமாக குழி தோண்டி புதைப்பதற்கு விண்ணப்பம் செய்திருந்தது தெரியவந்துள்ளது.
ஆனால், அப்படிப்பட்ட பள்ளிகள் அங்கு எத்தனை இருந்தன, எத்தனை மானவ மாணவியர் அங்கு புதைக்கப்பட்டார்கள் என்ற எண்ணிக்கை இன்னமும் யாருக்கும் சரியாக தெரியவில்லை.
பூர்வக்குடியினர் குறித்து ஆய்வுகள் செய்யும் புதைபொருள் ஆய்வாளரான Kisha Supernant என்பவர், கல்லறைகள் எதையும் சேதப்படுத்தாமல், ராடார் உதவியுடன் அப்பகுதியில் எத்தனை உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்திய உண்டுறை பள்ளி குடியமர்வு ஒப்பந்தம் கனடா முழுவதும் 139 உண்டுறை பள்ளிகளைக் கண்டுபிடித்துள்ளது. அவற்றில் 25 ஆல்பர்ட்டாவில் அமைந்துள்ளன. அந்த பள்ளிகளில், 1870களுக்கும் 1990களுக்கும் இடையில், 150,000 கனேடிய பூர்வக்குடியின, Métis மற்றும் Inuit என்னும் பூர்வக்குடியின சிறுவர் சிறுமியர் தங்கிப் படிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளார்கள்.
அவர்களில், குறைந்தது 4,100 சிறுவர் சிறுமியர் உயிரிழந்துள்ளர்கள், அதாவது 50 மாணவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆனால், உண்மையில் இந்த எண்ணிக்கை 6,000க்கு மேல் இருக்கும் என கருதப்படுகிறது. உயிரிழந்தவர்களில் குறைந்தது 821 சிறுவர் சிறுமியர் ஆல்பர்ட்டாவில் உயிரிழந்துள்ளார்கள்.
கனடாவில் தொடர்ந்து உண்டுறை பள்ளிகளில் நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமியர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் விடயம் பூதாகரமாகி வருகிறது.