சுவிஸ் மாவட்டம் ஒன்றில் கேட்கும் விசித்திர சத்தம்: குழப்பத்தில் மக்கள்
சுவிட்சர்லாந்தின் St. Gallen மாநிலத்தில் மாவட்டம் ஒன்றில் இரவு நேரம் உரத்த இடி முழக்கம் கடந்த சில நாட்களாக கேட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பலர் பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. Linsebühl மாவட்டத்திலேயே இரவு சுமார் 9 மணியளவில் குறித்த விசித்திர சத்தம் கேட்டு வருகிறது.
தொடக்கத்தில், புத்தாண்டுக்காக வாங்கிய பட்டாசுகளை கொளுத்துவதாகவே மக்கள் கருதியுள்ளனர். ஆனால் பட்டாசு கொளுத்துவதால் ஏற்படும் வெளிச்சம் ஏதும் தெரியவரவில்லை என்கிறார்கள் சிலர்.
மேலும், துப்பாக்கி வெடிக்கும் சத்தமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர் சிலர். பலூன் வெடித்துச் சிதறும் சத்தமாக கூட இருக்கலாம் என்கிறார்கள் சிலர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு St. Fiden ரயில் நிலையத்தில் பட்டாசுகளுடன் மூவரை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். 19 வயது ஜேர்மானிய இளைஞர், 33 மற்றும் 44 வயது சுவிஸ் நபர்கள் இருவர் என மூவரை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், Linsebühl மாவட்ட மக்கள் கேட்ட விசித்திர சத்தத்திற்கும், கைதான மூவருக்கும் தொடர்புள்ளனவா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றே கூறப்படுகிறது.