கனேடிய மாகாணம் குடிமக்களுக்கு விடுத்த முக்கிய கோரிக்கை
காலாவதியான ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் சுகாதார அட்டையை புதுப்பிக்க வேண்டும் என ஒன்ராறியோ மாகாண நிர்வாகம் குடிமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
2022, பிப்ரவரி 28ம் திகதிக்குள் சுகாதார அட்டை, ஒன்ராறியோ புகைப்பட அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை புதுப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவல் உச்சம் பெற்றிருந்ததால் மார்ச் மாதம் 2020கு பின்னர் காலாவதியாகும் ஏதேனும் அடையாள அட்டைகளை குடிமக்கள் புதுப்பிக்க தேவை இருக்காது என மாகாண நிர்வாகம் அறிவித்திருந்தது.
விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்த சுமார் 17% ஒன்ராறியோ மக்கள் உடனடியாக தங்கள் காலாவதியாகும் அடையாள அட்டைகளை புதுப்பிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், கனரக வணிக வாகன உரிமையாளர்கள் டிசம்பர் 31, 2021 க்குள் தங்கள் வாகன சரிபார்ப்புகளை புதுப்பிக்க வேண்டும் என்று மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், புதிய உரிமம் வைத்திருப்பவர்கள் (class G1, G2, M1 or M2) அவர்களின் புதிய ஓட்டுநர் உரிமத்தைப் பெற அல்லது மேம்படுத்த டிசம்பர் 31, 2022 வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.
தங்கள் அடையாள அட்டைகள் மற்றும் ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிக்க தவறும் குடிமக்கள் கடந்த ஆண்டு கட்டணத்தையும், அத்துடன் இந்த ஆண்டிற்கான புதுப்பிக்கல் கட்டணத்தையும் அபராதமாக செலுத்த நேரிடும்.