வேலையை ராஜினாமா செய்து ஒரு வருட சம்பளத்தை பெற்றுக்கொள்ளுங்கள்: அமேசான், கூகுள் வலியுறுத்தல்
உலகின் முண்ணனி நிறுவனங்களான அமேசான் மற்றும் கூகுள் தங்களது ஊழியர்களை உடனே வேலையை ராஜினாமா செய்து ஒரு வருட சம்பளத்தை பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது.
தொடரும் பணிநீக்கம்
உலகளவில் முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு முதலே பணிநீக்க நடவடிக்கைகளால் ஊழியர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
@behance
கூகுள், மெட்டா, அமேசான் உள்பட உலகளவில் 570 தொழில்நுட்ப நிறுவனங்கள் 2023 ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 68 ஆயிரத்து 918 ஊழியர்களுக்கு பணிநீக்க ஆணையை வழங்கி உள்ளன.
கடுமையான விதிகள் காரணமாக நிறுவனங்கள் தரப்பில் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் நல அமைப்புகளிடம் முன்கூட்டியே அறிவிக்காமல் பணிநீக்கம் செய்ய முடியாது என்ற சூழல் நிலவுகிறது.
ஊழியர்களிடம் வலியுறுத்தல்
பணிநீக்க நடவடிக்கைகளுக்கு முன்பு ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆணையங்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது.
இதன் காரணமாக கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களிடம் பணியினை ராஜினாமா செய்ய வலியுறுத்தி வருகின்றன.
@amazon.com
ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இயங்கி வரும் கூகுள் அலுவலக ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்படும் சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.
கூகுள் போன்றே அமேசான் நிறுவனமும் தனது மூத்த மேலாளர்களிடம், பணியை ராஜினாமா செய்து அதிகபட்சம் ஒரு வருடத்திற்கான சம்பளத்தை பணி நீக்க ஊதியமாக பெற்றுக் கொள்ள வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.