ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
உக்ரைனில் உள்ள மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவதை ரஷ்யா உடனடியாக நிறுத்தவேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பாகிஸ்தானில் இம்ரான் கானின் கட்சியை(பி.டி.ஐ.) தடை செய்வது குறித்து பாகிஸ்தான் அரசு பரிசீலனை செய்து வருவதாக கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வீசிய கடுமையான புயல் காரணமாக உருவான கட்டிட இடிபாடுகளில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளது.
மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத ரஷ்யாவும் சீனாவும் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை காணவும்.