சுவிட்சர்லாந்தில் தவறாக முடிந்த அறுவை சிகிச்சை: சிக்கிய மருத்துவர்
சுவிட்சர்லாந்தில் சாதாரண அறுவை சிகிச்சை தவறாக முடிந்த நிலையில், அந்த மருத்துவர் மீது கவனக்குறைவால் கொலைக்கு காரணமானதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் Uznach பகுதியில் 39 வயது பெண் ஒருவருக்கு பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து சுமார் 5 மணி நேரமான நிலையில், குறித்த பெண் அதிக ரத்தக்கசிவு காரணமாக மரணமடைந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த அறுவை சிகிச்சை முன்னெடுத்த மருத்துவர் மற்றும் அவருக்கு உதவியவர் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டது. கடந்த 2017ல் நடந்த இந்த வழக்கு தொடர்பில் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில்,
குற்றம்சாட்டப்பட்டுள்ள மருத்துவர் நிபந்தனைகளுடன் 80 நாட்களுக்கு தலா 400 பிராங்குகள் அபராதமாக செலுத்த வேண்டும் எனவும், மரணமடைந்த பெண்ணின் கணவருக்கு இழப்பீடாக 35,000 பிராங்குகள் அளிக்க வேண்டும் எனவும்,
அவரது தாயாருக்கு 15,000 பிராங்குகள் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பாகியுள்ளது.
மேலும் நீதிமன்ற விசாரணை செலவுகளாக 33,000 பிராங்குகள் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.