புகலிடக் கோரிக்கையாளர்களால் சிக்கலில் மாட்டிக்கொண்ட சுவிஸ் உணவகம்
சுவிட்சர்லாந்தின் பெர்ன் பகுதியில் உணவகம் ஒன்று புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு உதவியதால் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது.
பெர்ன் பகுதியில் அமைந்துள்ள Tenz Momo என்ற திபெத்திய உணவகமே புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட மக்களை வேலைக்கு அமர்த்தியது.
இது தொடர்பில் பொதுமக்கள் சிலரிடம் இருந்து புகார் எழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பெர்ன் நகர பொலிசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் குறித்த சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பலர் குறித்த உணவகத்தில் பணியாற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 8 பேர்கள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு, நாடு கடத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் குறித்த உணவ நிர்வாகம் இதுவரை கருத்தேதும் கூறவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
இருப்பினும் புகலிடக் கோரிக்கையாளர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் குறித்த சுவிஸ் உணவகம் தொழிலாளர் சட்டத்தை மீறியிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.