தண்ணீர் மெனுவை வழங்கும் பிரித்தானியாவின் முதல் உணவகம் - தண்ணீரில் என்ன வகைகள்?
பொதுவாக உணவகங்களுக்கு சென்றால், அங்கு பிரியாணி, தோசை, அசைவ உணவுகள், ஜூஸ் என விதவிதமான மெனுக்கள் இருக்கும்.
ஆனால், தண்ணீர் மெனுவை யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.
தண்ணீர் மெனு
பிரித்தானியாவில் உள்ள பிரெஞ்சு பாணி உணவகமான La Popoate, sommelier Doran Binder என்பவரால் உருவாக்கப்பட்ட தண்ணீர் மெனுவை தங்களது உணவகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது பிரித்தானியாவின் முதல் தண்ணீர் மெனு வழங்கும் உணவகமாகவும், உலகின் வெகு சில உணவகங்களில் ஒன்றாகவும் உள்ளது.
3 ஆண்டுகளுக்கு முன்னர், Doran Binder இந்த தண்ணீர் மெனு குறித்து உணவக உரிமையாளரிடம் பரிந்துரை செய்த போது, இது சாத்தியமில்லாத யோசனை எனக்கூறி நிராகரித்துள்ளனர்.
ஆனால், Doran Binder அவர்களை தனது பாருக்கு அழைத்து அங்கே விதவிதமான தண்ணீர் சுவைகளை அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர், தண்ணீரில் பல வகை சுவைகள் உள்ளதை அவர்கள் அறிந்துள்ளனர்.
பிரித்தானியா, ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பா முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து தண்ணீர்களை தேர்ந்தெடுத்துள்ளார்.
தண்ணீர் வகை மற்றும் விலைகள்
இதன் விலைகள் 5 பவுண்ட்(இந்திய மதிப்பில் ரூ.584) மதிப்பிலான Crag பிராண்ட் தொடங்கி, 19 பவுண்ட்(இந்திய மதிப்பில் ரூ.2,221) மதிப்பிலான The Palace of Vidago என்னும் மின்னும் போர்ச்சுகல் தண்ணீர் வரை உள்ளது.
தண்ணீரில் உள்ள தாதுக்களின் அளவே அதன் சுவை மாறுபாட்டிற்கு காரணம் ஆகும். அந்த அளவீடு TDS என அழைக்கப்படுகிறது. பூஜ்ஜிய TDS அளவு உள்ள நீர் மனிதர்கள் குடிப்பதற்கு ஏற்றது அல்ல.
இங்கு 14 TDS உள்ள Lauretana sparkling நீர் முதல் முதல், 3,300 TDS வரையிலான பிரான்ஸின் Vichy Celastins என பல வகையான குடிநீர்கள் பரிமாறப்படுகிறது.
அறை வெப்பநிலையில், ஐஸ் மற்றும் எலுமிச்சையுடன் இந்த நீர் பரிமாறப்படுகிறது. தண்ணீர் ஒயின் போன்றது, அதிக குளிராக இருந்தால், தண்ணீரில் சுவை இருக்காது என Doran Binder தெரிவித்துள்ளார்.
மது அருந்தாதவர்களுக்கு இது ஒரு சிறந்த மெனுவாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |