மழைக்கு இதமான ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் வெஜ் சூப்: இனி வீட்டிலேயே ஈசியா செய்யலாம்
தற்போது மழைக்காலம் என்பதால் அனைவருக்கும் அவ்வப்போது சூடான உணவை சாப்பிட ஆசையாக இருக்கும்.
அந்த வகையில் ஆரோக்கியமான மற்றும் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் வெஜ் சூப்பை வீட்டிலேயே தயாரித்து சாப்பிட்டால் மழை நேரத்திற்கு இதமாகவும் இருக்கும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.
தேவையான பொருட்கள்
- கேரட்- 1
- பீன்ஸ்- 5
- சோளம்- 1 கப்
- வெண்ணெய்- 1 ஸ்பூன்
- பூண்டு- 2 பல்
- வெங்காயம்- 1
- தண்ணீர்- 5 கப்
- உப்பு- தேவையான அளவு
- சோள மாவு- 1 ஸ்பூன்
- மிளகு தூள்- 1/2 ஸ்பூன்
செய்முறை
முதலில் கேரட், பீன்ஸ் இவற்றை கழுவி பொடி பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஊறவைத்த சோளத்திலிருந்து 1/4 கப் சோளத்தை மட்டும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் அதில் நறுக்கிய பூண்டு, வெங்காயம்,கேரட், பீன்ஸ் மற்றும் மீதமுள்ள 1/4 கப் சோளத்தை சேர்த்து வதக்கவும்.
2 நிமிடம் கழித்து அதில் அரைத்து வைத்துள்ள சோளத்தை சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதில் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
இறுதியாக இதில் எடுத்துவைத்துள்ள சோளமாவை கரைத்து ஊற்றி 15 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால் சுவையான ஆரோக்கியமான வெஜ் சூப் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |