ஆசிய நாடுகள் உட்பட... சில நாட்டவர்களின் விசா அனுமதியைக் கட்டுப்படுத்த பிரித்தானியா முடிவு
பிரித்தானியாவில் காலம் தாண்டியும் தங்கியிருக்க வாய்ப்புள்ள குறிப்பிட்ட சில நாட்டினரின் விசாக்களைக் கட்டுப்படுத்த லேபர் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எண்ணிக்கையை குறைக்க
குறித்த பட்டியலில் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா நாட்டவர்களும் உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த நாட்டினர் உட்பட பிற நாட்டினரின் வேலை மற்றும் படிப்பு விசாக்களுக்கான விண்ணப்பங்களை உள்விவகார அமைச்சு அலுவலகம் விரைவில் கட்டுப்படுத்தலாம்.
அடுத்த வார குடிவரவு வெள்ளை அறிக்கையில் இந்த விரிவான சீர்திருத்தங்கள் வெளியிடப்பட உள்ளன. கடந்த ஆண்டு சாதனை அளவாக புலம்பெயர் மக்களின் வருகை 728,000 என எட்டிய பின்னர் நிகர புலம்பெயர் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் இந்த திட்டம் இருக்கும் என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, ஏழைகளாகக் காட்டிக் கொள்ள மோசடியான வங்கி அறிக்கைகளைப் பயன்படுத்தும் விசா விண்ணப்பதாரர்கள் மீது குடிவரவு அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அமைச்சர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், தாங்கள் ஆதரவற்றவர்கள் என்றும், அரசாங்க உதவியுடன் செயல்படும் தங்குமிடங்கள் தேவைப்படுவதாகவும் பொய்யாகக் கூறுபவர்களையும் இனி அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.
கொள்கை முடிவில் உறுதி
அத்துடன் அதிக ஆபத்துள்ள நாடுகளைச் சேர்ந்த விசா விண்ணப்பதாரர்கள், தங்கி புகலிடம் கோரும் ஒருவரின் சுயவிவரத்துடன் பொருந்தினால், அவர்களின் கோரிக்கைகளும் முற்றிலும் நிராகரிக்கப்படலாம்.
தற்போது பிரதமர் ஸ்டார்மரின் அரசாங்கத்தால் கண்காணிக்கப்படும் நாட்டவர்களில் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளது. ஆனால், புலம்பெயர் விவகாரத்தில் பாகுபாடு குறித்த நீதிமன்ற சவால்களை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என சில சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இருப்பினும், கொள்கை முடிவில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், வாய்ப்புகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும், விதி மீறலில் ஈடுபடுபவர்களால் உண்மையான புலம்பெயர்ந்தோர் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றும் அரசாங்கம் கூறுகிறது.
மேலும், மாணவர்கள் விசாவில் பிரித்தானியாவில் நுழைய அனுமதி பெற்று, பின்னர் வகுப்பறைகளில் நுழையாத அல்லது சட்டவிரோத குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்படும் விண்ணப்பதாரர்களும் இனி அரசாங்கத்தால் கண்காணிக்கப்படுவார்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |